அனிருத் BGM இல் தெறிக்கும் வசனம்... நானி கையில் மோசமான கெட்டவார்த்தை... தி பாரடைஸ் கிளிம்ப்ஸ்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், நேச்சுரல் ஸ்டார் என்றும் அழைக்கப்படுபவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான சனிக்கிழமை சூர்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 100 கோடி வசூலித்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. சமீபத்தில் ஹிட் 3 படத்தின் டிரைலர் வெளியானது. இந்நிலையில், நானி நடித்துள்ள தி பாரடைஸ் படத்தின் கிளிம்ப்ஸ் மாஸ் பிஜிஎம், தெறிக்கும் வசனங்களுடன் ஆரவாரத்தை கிளப்பியுள்ளது.

வித்தியாசம்: தெலுங்கு சினிமாவில் ஒரே மாதிரியான ஹீரோ டெம்பிளேட்டில் மாட்டிக்கொள்ளாமல் கொஞ்சம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டவர் நானி. ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, தசரா, ஹாய் நான்னா, நேனு லோக்கல், ஜெர்சி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. ரசிகர்களுக்கு பிடித்த டாப் 10 படங்களில் லிஸ்டில் இவை உள்ளன. தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

the Paradise glimpse nani Anirudh

தமிழ் இயக்குநர்: தற்போது வெளியாகும் மாற்று மொழி படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது. எந்த மொழிகளில் படங்கள் எடுக்கப்பட்டாலும் அவற்றை தற்போது பான் இந்தியா படமாகவே வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிடுகின்றனர். சமீபத்தில் ஹாய் நான்னா படத்தின் ப்ரேமோஷனுக்காக சென்னை வந்திருந்த நானி தமிழ் இயக்குநருடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். எனக்கு பிடித்த இயக்குநர் என்றும் அவர் கூறியிருந்தார்.

தி பாரடைஸ் கிளிம்ப்ஸ்: நானி நடித்துள்ள தி பாரடைஸ் படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. இதில், கேஜிஎப் படத்தில் இடம்பெற்ற காட்சியை போன்ற பில்டப்புடன் தொடங்குகிறது. பெண்ணின் குரல் ஒலிக்க உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவான கதை என தெரிகிறது. இதில், சரித்திரத்தில் எல்லாரும் கிளி, புறா, கழுகு என எழுதியிருக்காங்க அதே சாதியில பிறந்த காக்காவை பத்தி ஒரு பயகூட யோசிக்கவே இல்லை. இது வயிறு எரிந்த காக்கைகளின் கதை என படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

வரலாற்று கதை: பாரடைஸ் படத்தில் நானி ஒரு கூட்டத்தின் தலைவனாகவும், புரட்சியாளனாகவும் தோன்றுகிறார். கங்குவா படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் தோற்றத்தில் நானி தோன்றுகிறார். ரத்தம் தெறிக்க வெடி சத்தம் முழங்க நானி வருகிறார். இதுவரை இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திராத நானி இப்படத்திற்காக மெனக்கெட்டுள்ளார் என்பது கிளிம்பஸை பார்க்கும் போதே தெரிகிறது. அடிமையாக இருந்த மக்களை மீட்கும் தலைவனின் கதை போன்று இருக்கிறது.

மாஸான அனிருத் பிஜிஎம்: காக்கைகள் அதிகம் வாழும் பகுதியில் மக்களின் குடியிருப்பு இடம்பெறுகிறது. இதில் இறந்த மனிதர்களின் ரத்தவாடை அடிக்கிறது. ஒரு பக்கம் அழுத்தமான பெண்ணின் குரல் பின்னணியில் ஒலிக்க நானி என்ட்ரி தெறிக்க விடுகிறது. அனிருத் சும்மாவே செஞ்சிடுவாரு. இப்படத்தில் பிஜிஎம் வேற லெவலில் உள்ளது. நானியின் என்ட்ரி தொடங்கும் முன்பே பிஜிஎம் பட்டையை கிளப்புகிறது. தெறிக்கும் வசனத்திற்கு நடுவே ராக்ஸ்டார் என்பதை மீண்டும் அனிருத் நிரூபித்துள்ளார். ஜெர்சி, கேங் லீடர் படங்களை தொடர்ந்து 3வது முறையாக நானி படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பான வார்த்தை: தி பாரடைஸ் கிளிம்ப்ஸ் வீடியோவில் காலம் காலமா நடை பிணமா வாழ்றவங்க கதை என்று கூறும்போது மனதை உலுக்குகிறது. இப்படம் எதைப்பற்றி குறிப்பிடுகிறது என்பது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், டாஸ் மகன் என்ற வார்த்தை அழுத்தமாக வருவதுடன், நானியின் கையில் இருக்கும் டாட்டூவிலும் அந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது முகம் சுழிக்க வைப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். பார்க்க பார்க்க வெறி ஏறுவது போல் உள்ளது நானியின் தோற்றம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிலீஸ் எப்போது: இப்படம் நிச்சயம் வரலாற்றோடு தொடர்புடைய படம் தான் என்பதில் சந்தேகம் இல்லை. தசரா படத்தின் வெற்றிக்கு பிறகு நானி - ஸ்ரீகாந்த் ஒடேலா 2வது முறையாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க காத்திருக்கின்றனர். இப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: nani anirudh நானி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X