நானே தலைக்கனம் பிடிச்சவன், இதில் சினிமாக்காரவுங்க...: நாஞ்சில் சம்பத் கலகல

By Siva

Recommended Video

எல்.கே.ஜி. சக்சஸ் மீட்டில் உருக்கமாக பேசிய நாஞ்சில் சம்பத்- வீடியோ

சென்னை: எல்.கே.ஜி. சக்சஸ் மீட்டில் நாஞ்சில் சம்பத் பேசிய விதம் அழகாக இருந்தது.

ஆர்.ஜே. பாலாஜி எழுதி நடித்த எல்.கே.ஜி. படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் பாலாஜியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் எல்.கே.ஜி. படத்தின் சக்சஸ் மீட் நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் கூறியதாவது,

வயது

வயது

இப்படி ஒரு இடத்திற்கு வருவேன் என்று கனவிலும் கருதியதும் இல்லை, ஆசைப்பட்டதும் இல்லை. ஆருயிர் தம்பி பாலாஜி, அவர் என்னை அப்பா என்று சொல்லும்போது கூச்சமாக உள்ளது. ஏனென்றால் நான் என் வயதை யாரிடமும் சொன்னது இல்லை. ஒரு புதிய உலகத்திற்குள் பிரவேசித்தது மாதிரி எனக்குள் ஒரு பரவசம்.

சினிமா

சினிமா

பாலாஜி என்னுடைய நிலைமையை தெரிந்து கொண்டு வந்தாரா என்று தெரியவில்லை. ஒரு நாள் அவரும், மயில்வாகனனும் வந்து நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார்கள். எனக்கு நடிக்கத் தெரியும்னு நினைக்கிறீர்களா என்று நான் கேட்டேன். நீங்கள் வந்தால் போதும்னு சொன்னாங்க. சரி என்று ஒத்துக் கொண்டேன். 9 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

செல்போன்

செல்போன்

எனக்கு நண்பர்கள் இல்லை. என் செல்போனில் யாருடைய எண்ணும் இருக்காது. யாருடனும் நெருங்கிப் பழக மாட்டேன். எப்பொதும் படித்துக் கொண்டும், வாசித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் ஒரு கேரக்டர் நான். அதிகாலை 5 மணிக்கு ரோஹினி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது முற்றுகையிட்ட வாலிபர்களுக்கு மத்தியில் நின்றபோது இன்று புதிதாய் பிறந்தது போன்று உணர்ந்தேன்.

கண்ணீர்

கண்ணீர்

நான் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவன். நான் வீட்டில் இருந்தால் கூட வெளியே யாருக்கும் தெரியாது. நான் அப்படித் தான் இருப்பேன். நான் ஊருக்கு போனபோது என் 32 ஆண்டு கால பொதுவாழ்வில் எனக்கு ஒரு வரவேற்பு கொடுத்ததை பார்த்து நான் அழுதுட்டேன். நான் ஏற்கனவே தலைக்கனம் பிடித்தவன். சினிமா உலகத்தில் உள்ளவர்களும் தலைக்கனமாக இருப்பார்களோ, முட்டிக்கிடுமோ என்று நினைத்தேன். ஆனால் ரொம்ப இயல்பாக இருந்தார்கள்.

பிள்ளை

பிள்ளை

நான் இதுவரை சாப்பிடாததை எல்லாம் ஷூட்டிங்கின்போது சாப்பிட்டேன். தினமும் ஷூட்டிங் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் அளவுக்கு இருந்தது. எனக்கு ஏற்கனவே 10 பிள்ளைகள். தற்போது ஆர்.ஜே. பாலாஜி 11வது பிள்ளையாக கிடைத்துள்ளார். இந்த பிள்ளையின் ஒவ்வொரு அங்குல வளரச்சிக்கும் என்னால் உதவ முடியாது. ஆனால் அதை பார்த்து நான் பெருமைப்படுவது போல இன்னொருவர் பெருமைப்பட முடியாத அளவுக்கு நான் உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் வாழ்வேன் என்றார் நாஞ்சில் சம்பத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X