நாஞ்சில் சம்பத் எனும் பிரச்சார பீரங்கியை பாடாய்படுத்திய பாலாஜி: வீடியோ இதோ
சென்னை: ஒரு பிரச்சார பீரங்கியாக இருந்த நாஞ்சில் சம்பத்தை இந்த ஆர்.ஜே. பாலாஜி பாடாய்படுத்தியிருக்கிறாரே.
ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படம் மூலம் அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் நடிகராகியுள்ளார். படத்திலும் அவர் அரசியல்வாதியாகவே நடித்துள்ளார்.
முதல் படம் ரிலீஸாவதற்குள் அடுத்த படத்தில் நடிக்கத் துவங்கிவிட்டார் அவர்.
பாலாஜி
வணக்கம் விஜய் டிவி, வணக்கம் சன் டிவின்னு சொல்ல வைத்து நாஞ்சில் சம்பத்திடம் விளையாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. படத்தில் வரும் ஒரு ஆங்கில வசனத்தை பேச சம்பத் ரொம்பவே கஷ்டப்பட்டது அந்த வீடியோவில் தெரிகிறது.
எல்.கே.ஜி.
பேச்சுத் திறமைக்காக பிரபலமானவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதாவிடம் இன்னோவா காரை பரிசாக வாங்கிய பிரச்சார பீரங்கியான அவரை இந்த பாலாஜி ஆங்கிலத்தில் பேசச் சொல்லி பாடாய் படுத்தி எடுத்துள்ளார். பாவம் எப்படி இருந்த நாஞ்சில் சம்பத் இப்படி ஆகிட்டாரே.

எல்.கே.ஜி.
பேச்சுத் திறமைக்காக பிரபலமானவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதாவிடம் இன்னோவா காரை பரிசாக வாங்கிய பிரச்சார பீரங்கியான அவரை இந்த பாலாஜி ஆங்கிலத்தில் பேசச் சொல்லி பாடாய் படுத்தி எடுத்துள்ளார். பாவம் எப்படி இருந்த நாஞ்சில் சம்பத் இப்படி ஆகிட்டாரே.

சினிமா
இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்த நாஞ்சில் சம்பத் மகனுக்கு ஃபீஸ் கட்டக் கூட முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். 600 சதுர அடி வீட்டில் வசிக்கும் அவர் சினிமா மூலமாவது சம்பாதித்து நல்லபடியாக இருக்கட்டும்.
பாவம்
ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்கள் பாவம்யா அந்த மனுஷனை இப்படியா கிண்டல் செய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மார்க் ஜக்கர்பர்க் நாகர்கோவில்காரர் என்று நாஞ்சிலிடம் கூறுவது எல்லாம் டூமச் பாலாஜி.

சர்கார்
சர்கார், பார்க்காமலேயே விமர்சனம் பண்ணினேன் என்று அந்த வீடியோவில் நாஞ்சில் சம்பத் தெரிவித்ததை பார்த்து விஜய் ரசிகர்கள் லைட்டா கடுப்பாகிவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











