ரவுடிகள் தாக்குதல்.. மருத்துவமனையில் நாஞ்சில் விஜயன் அட்மிட்.. சூரியாதேவியை கைது செய்ய கோரிக்கை!

By

சென்னை: ரவுடிகளால் தாக்கப்பட்ட நாஞ்சில் விஜயன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.

அதிகமாக பெண் வேடத்தில் இவர் காமெடி செய்வது வழக்கம். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

இப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். யூடியூப்பிலும் அடிக்கடி தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பாலை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையானது. முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

நாஞ்சில் விஜயன்

நாஞ்சில் விஜயன்

இதையடுத்து சமூக வலைதளங்களில் வனிதாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர். அப்போது, நாஞ்சில் விஜயனும் கருத்து தெரிவித்தார். இது பரபரப்பானது. நாஞ்சில் விஜயனும் யூடியூபர் சூரியாதேவிவும் வனிதாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

பின்னர் நடிகை வனிதா விஜயகுமார், சூரியாதேவி மீது புகார் கொடுத்தார். இது பரபரப்பான நிலையில், நாஞ்சில் விஜயனும் சூரியாதேவியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விமர்சித்திருந்தார் வனிதா. இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது. நாஞ்சில் விஜயனும் அவரை கடுமையாக விமர்சித்தார்.

மன்னிப்புக் கேட்கலை

மன்னிப்புக் கேட்கலை

பின்னர் தன்னிடம் நாஞ்சில் விஜயன் பேசி, மன்னிப்புக் கேட்டதாக வனிதா விஜயகுமார் கூறினார். இதை மறுத்த நாஞ்சில் விஜயன், மன்னிப்புக் கேட்கவில்லை என்று கூறியிருந்தார். சூரியாதேவியும் நாஞ்சில் விஜயனும் நட்புடன் இருந்தாகக் கூறப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை ஓய்ந்திருந்த நிலையில், இப்போது வேறொரு பரபரப்பு தொற்றியுள்ளது.

ரவுடிகள் தாக்குதல்

ரவுடிகள் தாக்குதல்

நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்றிரவு ரவுடிகள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். அவருக்கு முகத்திலும் மண்டையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக அதில் கூறியுள்ளார்.

மருத்துவமனை

மருத்துவமனை

வீடியோவில், போலீசார் வீட்டுக்குள்ளும் வெளியேவும் நிற்கின்றனர். நாஞ்சில் விஜயன் தனது முகத்தில் உள்ள காயத்தை காண்பிக்கிறார். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி உள்ளனர். இப்போது அவர் சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ள ஒரு போட்டோவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கைது செய்யணும்

கைது செய்யணும்

அதில், நாஞ்சில் விஜயன் பெட்டில் படுத்திருக்கிறார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். சூரியாதேவியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீங்க கவலைப்படாதீங்க. நாங்க இருக்கோம் என்று சில நெட்டிசன்ஸ் ஆறுதல் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X