புதுசா பூட்டு வாங்கியிருக்கேன்.. அதுவும் ஒரு பிரபலத்துக்கு.. வனிதாவை சீண்டும் நாஞ்சில் விஜயன்!
சென்னை: லெபனான் குண்டு வெடிப்பு, கொரோனான்னு பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலும், இவங்களோட குழாய் அடி சண்டை எப்போது தான் ஓயுமோ என்று தெரியவில்லை.
ஆளாளுக்கு ஒருத்தர் மீது ஒருத்தர் மாற்றி மாற்றி புகார் கொடுத்துக் கொண்டும், வழக்குப் போட்டுக் கொண்டும் உள்ள நிலையிலும், சமூக வலைதளத்தில் மறைமுகமாக சாடிக் கொள்வதை தவிர்ப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில், தற்போது, பெரிய பூட்டோடு புதிய பூதத்தை கிளப்பி உள்ளார் நாஞ்சில் விஜயன்.

வனிதா விஜயகுமார் Vs பெரிய லிஸ்ட்
வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தை தொடர்ந்து, உருவான சர்ச்சைகள், மிகப்பெரிய சண்டையில் போய் முடிந்தன. லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, எலிசபெத் ஹெலன், சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன், ரவிந்தர் என பெரிய லிஸ்டே வனிதா விஜயகுமாருடன் மோதினாலும், அனைவரையும் தனி ஆளாக சமாளித்து வருகிறார்.

விடாமல் துரத்தும் நாஞ்சில் விஜயன்
விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன், பிக்பாஸ் வீட்டில் நீங்க பண்ண கூத்தெல்லாம் தெரியும் என வனிதா விஜயகுமார் மீது பாய, நீயும் சூர்யாதேவியும் சேர்ந்து அடிச்ச கூத்த பாருன்னு இருவரும் மது அருந்தும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதனை தொடர்ந்து ராஜமாதா லுக்கில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதாவை, அதே போன்ற லுக்கில் தனது புகைப்படத்தை பதிவிட்டு கலாய்த்து இருந்தார்.

மன்னிப்பு கேட்கல
வனிதா விஜயகுமார் குறித்து பதிவிட்ட போட்டோக்களையும், வீடியோக்களையும் திடீரென நாஞ்சில் விஜயன் நீக்கினார். அதனை தொடர்ந்து, தன்னிடம் நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டார் என வனிதா விஜயகுமார் ட்வீட் போட, மன்னிப்பா? அதெல்லாம் ஒண்ணும் கேட்கல, அப்படி நினைச்சா அது உங்க தப்பு என மறுபடியும் பிரச்சனையை கிளறி வருகிறார் நாஞ்சில் விஜயன்.
Recommended Video

பெரிய பூட்டு
இந்நிலையில், பெரிய பூட்டு ஒன்றை புதிதாக வாங்கி உள்ளேன். அதுவும் ஒரு பிரபலத்துக்கு என பூட்டுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, மறைமுகமாக மீண்டும் வனிதா விஜயகுமாரை வம்பிழுத்து இருக்கிறார் நாஞ்சில் விஜயன். முன்னதாக பூட்டு, சாவி அச்சிட்ட மோதிரங்களை வனிதா விஜயகுமார் தனது மூன்றாவது திருமணத்திற்காக உருவாக்கி இருந்தது குறித்து வெளியிட்டு வைரலாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

போடு பார்ப்போம்
நாஞ்சில் விஜயனின் இந்த வில்லங்கமான ட்வீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. வனிதா ரசிகர்கள், எங்க போடு பார்ப்போம் என வனிதாவின் புகைப்படத்தை பதிவிட்டு கமெண்ட் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், சிலர், இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத வேலை, வனிதாவை விட்டுட்டு பொழப்பை பாருங்க என கமெண்ட் செய்துள்ளனர்.

வனிதாவுக்குத் தானே
வனிதா விஜயகுமாரின் ஹேட்டர்ஸ், அந்த பூட்டு வனிதாவுக்குத் தானே என்றும், இதெல்லாம் அவங்களுக்கு பத்தாது பாஸ்.. கடிச்சி முழுங்கிடு வாங்க என்றும் கமெண்ட் செய்து நாஞ்சில் விஜயனுக்கு சப்போர்ட் செய்துள்ளனர். மேலும் சிலர், இந்த பூட்டு உனக்கும் சூர்யா தேவிக்கும் தான் எனவும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











