தினமும் போன் செய்து மிரட்டும் திருநங்கை.. மனைவியுடன் கண்ணீர் பேட்டி கொடுத்த நாஞ்சில் விஜயன்!

சென்னை: விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் மற்றும் திருநங்கை வைஷு பிரச்னை கடந்த சில மாதங்களாவே நடைபெற்று வருகிறது. நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என்றும், பணம் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டார் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக புகாரும் அளித்தார். அதன் பின்னர் புகாரை வாபஸ் பெற்றார்.

சில மாதங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் திருநங்கை வைஷு நாஞ்சில் விஜயன் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார். அப்படி இருக்கையில் நாஞ்சில் விஜயன் மற்றும் அவரது மனைவி இணைந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தனர்.

Nanjil Vijayan And His Wife Slams Transwoman Vaishu at Press Meet

அப்போது, நாஞ்சில் விஜயன் பேசுகையில், " நான் அவரை ஏமாற்றியதாகவோ, காதலித்ததாகவோ, தவறாக நடந்து கொண்டதாகவோ, பணம் வாங்கியதாகவோ, அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அப்படி இருக்கிறது என்றால் அதை வெளியிடச் சொல்லுங்கள். அவர் பல யூடியூப் சேனல்களில் என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும் தேவையில்லாதவற்றை எல்லாம் பேசுகிறார். எனது பாலினம் குறித்து எல்லாம் பேசுகிறார். இப்படி பேசுகையில் மிகவும் எமோஷனல் ஆனார்.

கெட்ட பெயர்: நான் மீடியா சர்க்கிளில் பலருடன் அன்பாக பழகுகிறேன். அது போல தான் வைஷுவுடனும் அன்பாக பழகினேன். என்மீது இவ்வளவு குற்றம் சொன்ன பின்னரும் வைஷு நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வைஷு அன்பிற்காக ஏங்கும் பெண். வைஷு இது போல செய்வதால் மற்ற திருநங்கைகளுக்கும் கெட்டப் பெயர். வைஷு திடீரென ஏதாவது செய்து கொண்டால் எனது பாதுகாப்பிற்கு என்ன இருக்கிறது? அதற்காகத்தான் என்று தெரிவித்தார்.

Nanjil Vijayan And His Wife Slams Transwoman Vaishu at Press Meet

குழந்தை மீது சத்யம்: அதேபோல் அவரது மனைவி பேசுகையில், வைஷு தினமும் இரவு, நள்ளிரவு என குடித்துவிட்டு போன் செய்து மிரட்டுகிறார். அதுவும் நன்றாக குடித்துவிட்டு, போன் செய்து மிரட்டுகிறார். இது மட்டுமல்லாமல் எனது உடல் நிலை குறைத்து யூடியூப் சேனல்களில் விவாதிக்க அவர் யார்? அவருக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது. எனது குழந்தையை எதற்காக இழுக்கிறார். குழந்தை மீது சத்தியம் செய்யச் சொல்கிறார்?" என்று எல்லாம் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X