என்ன டப்புன்னு இப்படி பல்டி அடிச்சுட்டாப்ல.. வனிதாவிடம் திடீரென மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமாரிடம் நாஞ்சில் விஜயன் மன்னிப்புக் கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

எலிசபெத் ஹெலன்
இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். வனிதாவின் திருமணம் குறித்து சூரியாதேவி என்பவரும் நடிகை கஸ்தூரி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

போலீசில் புகார்
அவர்களை கடுமையாகச் சாடிய வனிதா, சூரியாதேவி மீது போலீசில் புகார் கொடுத்தார். அவர் கைது செய்யப்பட்டார். லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் ஷோவில் கடுமையாக நடிகை வனிதா பேசினார். இதையடுத்து அவர் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். பதிலுக்கு வனிதாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்த பிரச்னையில் விஜய் டிவி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயனும் நடிகை வனிதாவை திட்டி இருந்தார்.

சரக்கடிக்கும் போட்டோ
நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவியும் சேர்ந்து தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர் என வனிதா குற்றம் சாட்டினார். இந்நிலையில், நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவியும் ஒன்றாக சரக்கடிக்கும் போட்டோவை ஷேர் செய்து இதுதான் தமிழ் கலாச்சாரமா? எனக் கேட்டிருந்தார் நடிகை வனிதா. இது பரபரப்பானது. இந்நிலையில் நடிகை வனிதா, தன்னிடம் நாஞ்சில் விஜயன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.

சூரியாதேவி காரணம்
இதுபற்றி நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது: நாஞ்சில் விஜயன் நேற்று என்னிடம் பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். அவரும் நானும் சந்தித்தது கூட இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் சூரியாதேவிதான் காரணம். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து சூழலை தவறாகப் பயன்படுத்தி உள்ளார்.

அதிருப்தியை சொன்னேன்
மற்றவர்களின் பிரச்னைகளை ஆராய்வதை விட்டுவிடுங்கள். அவர்கள் பிரச்னையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். இடையில் நீதிபதியாகவோ, வழக்கறிஞராகவோ விளையாட முயற்சிப்பதுதான் பிரச்னையை பெரிதாக்குகிறது. நாஞ்சில் விஜயனிடம் அவரது வீடியோக்கள் பற்றிய எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன்.

மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன்
அதை விரைவில் நீக்குவதாகவும் அதுபற்றி தானே விளக்கம் ஒன்றை வெளியிடுவதாகவும் நாஞ்சில் விஜயன் சொன்னார். அவர் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் இழுத்து விடப்பட்டுள்ளார் என நினைக்கிறேன். அவர் திறமையான இளைஞர். வளர்ந்து வரும் நேரத்தில் சர்ச்சைகள் அவருக்கு தேவையில்லை என்று நினைத்ததால் அவர் மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன். இவ்வாறு நடிகை வனிதா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











