வனிதாவின் ராஜமாதா லுக்குடன் கம்பேர் செய்த விஜய் டிவி பிரபலம்.. பொழப்ப பார்க்க சொல்லும் நெட்டிசன்ஸ்!
சென்னை: வனிதா விஜயக்குமார் ராஜமாதா லுக்குடன் ஷேர் செய்த போட்டோவுடன் தனது போட்டோவை ஒப்பிட்ட விஜய் டிவி பிரபலத்துக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதுதொடர்பாக ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் போட்டோக்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை வனிதா கலக்கப் போவது யாரு செட்டில் ராஜமாதா சிவகாமிதேவி கெட்டப்பில் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார்.

நாஞ்சில் விஜயன்
அதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன ராஜமாதா சிவகாமி தேவிக்கு வந்த சோதனை என பங்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் தன்னுடைய ராஜமாதா லுக்கை அவரது ராஜமாதா லுக்குடன் ஒப்பிட்டு ஷேர் செய்துள்ளார்.

அவதூறு பரப்புவதாக
ஏற்கனவே வனிதாவுக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவியும் சேர்ந்துதான் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர் என வனிதா குற்றம் சாட்டிவருகிறார்.

இது தேவையா?
இந்நிலையில் வனிதாவை சீண்டும் வகையில் நாஞ்சில் விஜயன் இப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த பிரச்சனை தேவையா என்றும் போய் பிழைப்பை பாருங்கள் என்றும் அட்வைஸ் செய்துள்ளனர்.

வீணாக பப்ளிசிட்டி
இன்னும் சில நெட்டிசன்கள் உங்களுக்கு விஜய் டிவியில் வாய்ப்பில்லாமல் போக போகிறது என்றும் எச்சரித்துள்ளனர். சில நெட்டிசன்கள் வனிதாவுக்கு எதுக்கு இப்படி வீணாக பப்ளிசிட்டி கொடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

வச்சு செய்யுங்கள்..
வனிதாவை பற்றி பேசாமல் விட்டாலே அவர் எந்த பிரபலமும் இல்லாமல் போய் விடுவார், இதுபோன்று போட்டு நீங்கள்தான் அவரை பெரிய ஆளாக்குகிறீர்கள் என்றும் கூறி வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள், நாஞ்சில் விஜயனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வனிதாவை வச்சு செய்யுங்கள், அவருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











