சூரியாதேவி ரவுடிகளுடன் வந்து தாக்கியது ஏன்? காயம் அடைந்த நாஞ்சில் விஜயன் போலீசில் புகார்!

By

சென்னை: தன்னை ரவுடிகளுடன் வந்து தாக்கியதாக சூரியாதேவி மீது நாஞ்சில் விஜயன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Recommended Video

Surya Devi Vs Nanjil Vijayan | ரவுடிகளுடன் Nanjil Vijayaனை தாக்கிய Surya Devi

விஜய் டிவியில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.

பெண் வேடத்தில் பங்குபெரும் இவர் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

யூடியூப்பில் நிகழ்ச்சிகள் செய்துவருகிறார். நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பாலை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையானது. விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் வனிதாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அப்போது, நாஞ்சில் விஜயனும் கருத்து தெரிவித்தார். இது பரபரப்பானது. நாஞ்சில் விஜயனும் யூடியூபர் சூரியாதேவியும் வனிதாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். பின்னர் சூரியாதேவியும் நாஞ்சில் விஜயனும் நட்புடன் இருந்தாகக் கூறப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனை ஓய்ந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வீடு புகுந்து தாக்குதல்

வீடு புகுந்து தாக்குதல்

நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு, ரவுடிகள் புகுந்து தாக்கியுள்ளனர். அவருக்கு முகத்திலும் மண்டையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக அதில் கூறி இருந்தார்.

யூடியூப் படப்பிடிப்பு

யூடியூப் படப்பிடிப்பு

அதாவது, வளசரவாக்கம், வீரப்பா நகரில் உள்ள வீட்டில் டிவி நடிகை சீபா உள்ளிட்டோருடன் யூடியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்திருக்கிறார் நாஞ்சில் விஜயன். அப்போது அந்த வீட்டிற்குள் தனது ஆட்களுடன் புகுந்த சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன், நடிகை சீபா மற்றும் வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

இதில் நாஞ்சில் விஜயன் மற்றும் நடிகை சீபா இருவரும் காயம் அடைந்தனர். வனிதா விஜயகுமார் திருமணத்தின் போது சூர்யாதேவிக்கும், வனிதாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக நான் இருந்ததாக கூறி சூரியாதேவி ஆட்களுடன் வீடு புகுந்து தாக்கிவிட்டு சென்றதாகக் கூறியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

போலீசில் புகார்

அவரும் நடிகை சீபாவும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X