நாஞ்சில் விஜயன் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்.. யூடியூபர் சூரியாதேவி மீது பரபரப்பு புகார்!

By

சென்னை: தனது வீட்டுக்குள் புகுந்து ரவுடிகள் தாக்கியதாகவும் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் நாஞ்சில் விஜயன் புகார் கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.

இப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். யூடியூப்பிலும் அடிக்கடி தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

வனிதாவுக்கு எதிராக

வனிதாவுக்கு எதிராக

நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பாலை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையானது. முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் வனிதாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர்.

நாஞ்சில் விஜயன்

நாஞ்சில் விஜயன்

அப்போது நாஞ்சில் விஜயனும் கருத்து தெரிவித்தார். இது பரபரப்பானது. நாஞ்சில் விஜயனும் யூடியூபர் சூரியா தேவிவும் வனிதாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். பின்னர் வனிதா, சூரியாதேவி மீது புகார் கொடுத்தார். இது பரபரப்பான நிலையில், தன்னிடம் நாஞ்சில் விஜயன் பேசி, மன்னிப்புக் கேட்டதாக வனிதா விஜயகுமார் கூறினார்.

ரவுடிகள் தாக்குதல்

ரவுடிகள் தாக்குதல்

இதை நாஞ்சில் விஜயன் மறுத்தார். தான் மன்னிப்புக் கேட்கவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை ஓய்ந்திருந்த நிலையில், நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்றிரவு ரவுடிகள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

கொலை செய்ய முயற்சி

இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக அதில் கூறியுள்ளார். வீடியோவில், போலீசார் வீட்டுக்குள்ளும் வெளியேவும் நிற்கின்றனர். நாஞ்சில் விஜயன் தனது முகத்தில் உள்ள காயத்தை காண்பிக்கிறார்.

போலீசார் விசாரணை

வீட்டின் உள்ளே பெண் ஒருவரின் கையில் காயம் இருக்கிறது. அவர் கை வலிப்பதாக அழுகிறார். மருத்துவமனைக்கு செல்லலாம் என்கிறார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படும் காட்சி இருக்கிறது. இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.'நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆச்சே என்று சிலர் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X