நாஞ்சில் விஜயன் மனைவின் வளைகாப்பு.... சீரோடு வந்து அசத்திய ரோபோ சங்கர்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன். சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார். இவருக்கு 2023ம் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அவரின் மனைவி மரியாவிற்கு தடபுடலாக வளைகாப்பு நடந்துள்ளது. அதன் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
நகைச்சுவை நடிகரான நாஞ்சில் விஜயனுக்கு பெண் வேடங்கள் பக்காவாக பொருந்தி இருக்கும். இதனால், பெரும்பாலும் இவர் பெண் வேடத்திலேயே காமெடி நிகழ்ச்சியில் வந்து ரசிகர்களை மகிழ்வித்து இருப்பார். இவரின் உடல் மொழிக்கும் , இவரின் பேச்சை ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. சின்னத்திரையில் பிரபலமான நாஞ்சில் விஜயன், தற்போது வெள்ளித்திரையிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வளைகாப்பு விழா: நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரியா மேக்ரினா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஜோடியாக விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மரியா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை நாஞ்சில் விஜயன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து இன்று மரியாவுக்கு அரும்பாக்கத்தில் உள்ள ஐஸ்வர்யா மஹாலி தடபுடலாக வளைகாப்பு நடந்தது. இதில், நடிகை நளினி, தாடி பாலாஜி, புகழ், சாய் சக்தி, ஈரோடு மகேஷ், அனிதா சம்பத், ரஞ்சித், பிக் பாஸ் தாமரைச்செல்வி என சின்னத்திரை நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொண்டு ஜோடியை வாழ்த்தினர். தடபுடலாக கடந்த இந்த வளைகாப்பு விழாவில், ரோபோ சங்கர், அவரது மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா, மருமகன் கார்த்திக்குடன் சீர்வரிசையோடு வந்து அசத்தினார்.

அப்போது பேசிய, நாஞ்சில் விஜயன், கடவுளின் ஆசிர்வாதத்தால், நாங்க அப்பா அம்மா ஆகப் போறோம். இந்த நளினி அம்மா, ரோபோ சங்கர் குடும்பத்தினரால் தான் எங்க திருமணம் நடந்தது. எங்கள் திருமணத்தில் கலந்து கொண்ட எல்லாரையும் மீண்டும், இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம், மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியா இருக்கு. சின்னத்திரை நடிகர் நடிகைகள் எல்லாருமே ஒரே குடும்பமா இருக்கிறோம் என்பதை இந்த வளைகாப்பின் மூலமாக மீண்டும் நிரூபித்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











