கேரளாவை உலுக்கிய தற்கொலை.. செருப்பை கழட்டி அடி.. இப்படியா செய்வ.. கொந்தளித்த நாஞ்சில் விஜயன்!

சென்னை: கேரளாவில் பேருந்தில் கூட்ட நெரிசலை தன்னை பாலியல் நோக்கத்துடன் சீண்டியதாக, பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ சில மணிநேரத்தில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட தீபக் என்கிற இளைஞர் தூக்கிட்டு தனது தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தீபக்கின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபக் இப்போது நம்ம கூட இல்ல, அவர் குடும்பம் படுற கஷ்டத்தை பார்க்கும்போது அனைவருக்குமே கண் கலங்குகிறது. பேருந்தில் உண்மையிலேயே ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற அநியாயம் நடக்கும் போது அந்த பெண், என்ன செய்திருக்க வேண்டும் என்றால், அந்த இடத்திலேயே அவரை அடித்திருக்க வேண்டும். அப்படியில்லை, என்றால் சற்று தள்ளி நின்று இருக்க வேண்டும். நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால், கூட்டமான பேருந்தில் பயணம் செய்யும்போது சில நேரம் தெரியாமல் கூட கைபட்டுவிடலாம்.

Kerala bus Nanjil Vijayan
Photo Credit:

நாஞ்சில் விஜயன்: ஆனால், அந்தப்பெண் இதை பதிவாக வெளியிட்டதால், இன்று ஒரு உயிர் பலியாகி இருக்கிறது. இந்த பெண்ணை மட்டும் நான் குற்றம் சொல்லவில்லை. இந்த சமுதாயத்தில் பல பெண்கள், இது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். நம்முடைய சமுதாயத்தில் பெண்களுக்கு எப்போதுமே சட்டம் ஆதரவாக தான் இருக்கிறது. அது ஏனென்றால், பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை பெண்களே, பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் இது போன்ற சட்டம் இருக்கிறது. ஆனால், நிறைய பெண்கள் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள். இப்படி சில பெண்கள் போடும் தவறான பதிவால் உண்மையிலேயே, பெண்களுக்கு பிரச்சனை நடக்கும்போது, அவர்கள் இதுபோன்ற பதிவை போட்டால் கூட, இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

மன வலிமையோடு இருங்கள்: அந்த வீடியோவை பார்க்கும் போதே தவறு அந்த பெண் மேல் தான் இருக்கிறது என்பது தெரிகிறது. இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால், தீபக் இந்த நேரத்தில் மன வலிமையோடு இருந்து இருக்க வேண்டும். இப்போது காலம் மாறிக்கொண்டு இருக்கிறது, சமூக ஊடகத்தின் வெளிச்சத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாம் எது செய்தாலும் அது ஊடகத்தின் வாயிலாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. நாம் எதுவும் செய்யவில்லை என்றாலும் இனி, வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகள் இனி வரும் காலங்களில் யாருக்கு வந்தாலும் இப்படி ஒரு விபரீத முடிவை எடுக்காமல் மன வலிமையோடு இருக்க வேண்டும். அதேபோல, சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற யாராவது புகார் ஒன்றை பதிவிட்டால், அது என்ன, ஏது என விசாரிக்காமல் தேவையில்லாமல் மோசமான கருத்துக்களை பதிவிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள் என நாஞ்சில் விஜயன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X