வனிதாவுக்கு நான் என்ன 5வது புருஷனா? என்கிட்டேயும் ஆதாரம் இருக்கு.. வெளுத்து வாங்கிய நாஞ்சில் விஜயன்!
சென்னை: தனக்கும் சூர்யாதேவிக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய வனிதா விஜயக்குமாரை விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் விளாசியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை போரூர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் இணையத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக புகார் அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வனிதாவும் அவரது வழக்கறிஞரும் சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவருக்கு விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் என்பவருடன் தொடர்பு உள்ளது என்றும் கூறினார்.

விஷயம் பூதாகரமானது
மேலும் இருவரும் சேர்ந்து பலான தொழில் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். அதோடு நாஞ்சில் விஜயனும் சூர்யாதேவியும் ஒன்றாக டிக்டாக் செய்த வீடியோவையும் ஆதாரமாக காட்டினர். இந்த விஷயம் பூதாகரமானது. இதனை தொடர்ந்து வனிதா மீது சூர்யா தேவி போலீஸில் புகார் அளித்தார்.

நாஞ்சில் விஜயன்
அதனை தொடர்ந்து வனிதாவுக்கும் சூர்யாதேவிக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தை நடத்த போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் சூர்யாதேவி அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் வனிதா குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வேடிக்கையாக உள்ளது
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், சூர்யா தேவியை ஒரு முறை பேட்டி எடுத்துள்ளேன் அதைத் தவிர அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. சூர்யா தேவிக்கும் எனக்கு தொடர்பு என கூறுவதைக் கேட்டால் வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது புருஷன்
நான் பிரபலம் என்பதால் என்னுடன் சேர்ந்து சூர்யா தேவி வீடியோ எடுத்துக்கொண்டார். அந்த வீடியோவை வைத்து எனக்கும் அவருக்கும் தொடர்பு என்று கூறுவது சரியல்ல. அப்படி என்றால் வனிதாவுடன் சேர்ந்து நான் வீடியோ எடுத்துள்ளேன். அதற்காக வனிதாவுக்கு நான் ஐந்தாவது புருஷன்னு சொல்லுவாங்களா என்று கேட்டுள்ளார்.

யூட்யூப் சேனல்
மேலும் வனிதா தொடர்பான பல ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்றும் நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார். நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று காமெடி செய்து வருகிறார். மேலும் யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











