For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கண்முன்னே தாய் தற்கொலை - காமெடி நடிகரின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய சோகம்

  |

  சென்னை: விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு?, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கலைஞர்களில் நாஞ்சில் விஜயனும் ஒருவர்.

  தனது வித்தியாசமான உடல்மொழி, மிமிக்கிரி செய்யும் குரல் போன்றவற்றால் பார்வையாளர்களை சட்டென தன்னை மறந்து சிரிக்க வைத்துவிடும் ஆற்றல் உடையவர்.

  அப்படிப்பட்ட கலைஞரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் மறைந்திருப்பது அண்மையில் அவர் தனியார் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

  விஜய் படத்தை தயாரிக்க தயார்...ஆனால்....போனி கபூர் சொன்ன அந்த விஷயம்

  கண்முன்னே தாய் தற்கொலை

  கண்முன்னே தாய் தற்கொலை

  ஒரு கலைஞனாக பல்வேறு அவமானங்களைச் சந்தித்திருக்கும் நாஞ்சில் விஜயன் அது குறித்து அப்பேட்டியில் கூறுகையில், "சிறுவயதில் நான் சந்தித்த மிகப் பெரிய வேதனைக்கு முன் இப்போது நான் எதிர்கொள்ளும் அவமானங்களோ, சோதனைகளோ பெரிய விஷயமே இல்லை. நாகர்கோயிலில் பிறந்து வளர்ந்த நான் சிறுவயதிலேயே அம்மாவை இழந்தேன். என் தாய் என் கண்முன்னேயே தற்கொலை செய்து கொண்டார். வாழை இலையில் அவரது கருகிய உடலைச் சுற்றி என் கைகளில் ஏந்தி ஆட்டோவில் கொண்டு சென்றேன். இதை விட ஒரு மனிதனுக்கு என்ன பெரிய வேதனையோ சோகமோ இருந்து விடப் போகிறது? அதனால் இப்போது வரும் எந்த ஒரு சோகத்தையும் நான் எளிதில் கடந்து செல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

  செருப்பால் அடிப்பேன் என்ற பெண்

  செருப்பால் அடிப்பேன் என்ற பெண்

  அண்மையில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாஞ்சில் விஜயனின் ஸ்கிரிப்டில் பிரபலம் ஒருவரைக் கலாய்ப்பது போன்ற காட்சிகள் இருந்திருக்கிறது. அதன் படி அவர் கலாய்த்து நடித்த போது அப்பெண் மிகுந்த கோபமடைந்து அது குறித்து நாஞ்சிலிடம் விசாரித்திருக்கிறார். அது ஒரு காமெடிக்காக செய்தது, நீங்கள் கூட என்னை ஆம்பளையே இல்லை என்று கலாய்த்திருக்கிறீர்களே? என்று நாஞ்சில் எவ்வளவோ எடுத்துக் கூறியும், எல்லோர் முன்னிலையிலும் அப்பெண், கெட்ட வார்த்தை ஒன்றை சொல்லி உன்ன செருப்பால அடிப்பேன் டா நாயே எனக் கத்தியிருக்கிறார். என்றாலும் தனக்கு வந்த உச்சக்கட்ட கோபத்தையும் கட்டுப்படுத்தி இந்த நிலையும் ஒருநாள் மாறும் என்று தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டதாக அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.

  லிப்ட் கேட்டு சந்தித்த அவமானம்

  லிப்ட் கேட்டு சந்தித்த அவமானம்

  ஈவிபி பிலிம் சிட்டியில் எப்போதும் ஷூட்டிங் முடிய நள்ளிரவு ஆகிவிடும். அந்த நேரத்தில் அங்கிருந்து எனது வீடு இருக்கும் வடபழனிக்கு செல்வதற்கு டேக்சி இருக்காது. அச்சூழ்நிலையில் ஒருநாள் என்னுடைய கோ ஆர்டிஸ்ட் ஒருவரிடம் என்னை வடபழனியில் இறக்கிவிடுமாறு உதவி கேட்டேன். ஆனால் அவர் வேண்டுமென்றே என்னிடம் ஏதேதோ காரணங்கள் சொல்லி எனக்கு உதவி செய்ய மறுத்தார். ஏன் இப்படி செய்தார் என அன்று இரவெல்லாம் யோசித்தேன். ஒருநாள் என் வாழ்க்கையும் மாறும் என்று நம்பினேன். அதனால் தான் இப்போது புது கார் வாங்கியபின் இரவு ஷூட்டிங் முடித்து கிளம்பும் போது யாராவது அங்கு இருந்தால் அவர்களையும் ஏற்றச் சென்று அவர்களின் இடங்களில் இறக்கி விடுகிறேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷம் என அப்பேட்டியில் நாஞ்சில் குறிப்பிட்டிருக்கிறார்.

  பிசியாக இருக்கும் நாஞ்சில்

  பிசியாக இருக்கும் நாஞ்சில்

  ஆரம்பத்தில் எல்லா கலைஞர்களுக்கும் ஏற்படும் அவமானங்களையும், சவால்களையும் சந்தித்துவிட்ட நாஞ்சில் விஜயன் தற்போது சீரியல், வெப்சீரிஸ், திரைப்படங்கள் என கலக்கி வருகின்றார். விரைவில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  English summary
  Nanjil Vijayan’s Mother Suicide turns his life into tragedy
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X