சூர்யா தேவி மண்டை உடைப்பா? நாஞ்சில் விஜயனின் நக்கல் இன்ஸ்டா பதிவ பாத்தீங்களா மக்களே!

சென்னை: நாஞ்சில் விஜயன் ஷேர் செய்துள்ள சூர்யாதேவியின் லேட்டஸ்ட் போட்டோ அவரது மண்டைக்கப்பட்டு தையல் போடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயனும் யூடிபர் சூர்யா தேவியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து இருவரும் கடுமையாக விமர்சித்தனர்.

உறவு இல்லை

உறவு இல்லை

இதனால் அவர்கள் மீது வனிதா போலீஸில் புகார் அளித்தார். இருவரும் தப்பான தொழில் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். அதனை மறுத்த நாஞ்சில் விஜயன் தான் பிரபலம் என்பதால் சூர்யா தேவி தன்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். அதற்கு மேல் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்றார்.

தாக்கிய சூர்யா தேவி

தாக்கிய சூர்யா தேவி

வனிதா புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி கைது செய்யப்பட்ட போது கூட நாஞ்சில் விஜயன், கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சூர்யா தேவி, அடியாட்களுடன் சென்று வளசரவாக்கம், வீரப்பா நகரில் உள்ள வீட்டில் யூடியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்த நாஞ்சில் விஜயனை தாக்கியதாக தெரிகிறது.

ஓடவிட்ட சூர்யாதேவி

ஓடவிட்ட சூர்யாதேவி

நாஞ்சில் விஜயன் மட்டுமின்றி நடிகை சீபா மற்றும் வீட்டில் இருந்தவர்களையும் சூர்யா தேவி தாக்கியதாக தெரிகிறது. மேலும் நாஞ்சில் விஜயனை அரை நிர்வாணமாகவும் ஓட விட்டார் சூர்யா தேவி அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இன்ஸ்டாவில் போட்டோ

இன்ஸ்டாவில் போட்டோ

காயமடைந்த நடிகை சீபாவும் நாஞ்சில் விஜயனும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து சூர்யா தேவி மீது நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

இரண்டு போட்டோக்கள்

இரண்டு போட்டோக்கள்

அதில் சூர்யா தேவி தனது சமூக வலைதள பக்கத்தில் டேய் நாஞ்சில் விஜயன், என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்.. வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு லைவ் வருகிறேன் என பதிவிட்டு தனது இரண்டு போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

மண்டையில் தையல்

மண்டையில் தையல்

அதில் ஒரு போட்டோவில் தனது முன்பக்க மண்டையில் தையல் போட்டிருப்பது போன்றுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நாஞ்சில் விஜயன் பாப்பா மண்டைல யாரோ கேக் கட்டிங் பண்ணிருக்காங்க போல என நக்கலடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X