Nanjil Vijayan Marriage: நாஞ்சில் விஜயனுக்கு திருமணம்.. தாலி கட்டும் வீடியோவை பார்த்தீங்களா!

சென்னை: விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு இன்று காலை கோலாகலமாக திருமணம் நடைபெற்ற நிலையில், தாலி கட்டும் வீடியோவை எல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாஞ்சில் விஜயன்.

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோக்களான சிரிச்சா போச்சு, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட ஏகப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நாஞ்சில் விஜயன் சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சூழ திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Nanjil Vijayan ties the knot with Maria in a grand wedding video trending

மரியா என்பவரை நடிகர் நாஞ்சில் விஜயன் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

நாஞ்சில் விஜயன் திருமணம்: "Finally நானும் மாப்பிள்ளை ஆயிட்டேன் என்னுடைய திருமண நிச்சயத்திற்கு வாழ்த்திய வாழ்த்திக் கொண்டிருக்கின்ற இன்னும் வாழ்த்தப்போகிற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனக்கு தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக இருந்து உடனிருந்து நடத்தி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்றும் நாஞ்சில் விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

Nanjil Vijayan ties the knot with Maria in a grand wedding video trending

நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், அம்பானி ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நாஞ்சில் விஜயன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

மணக்கோலத்தில் நாஞ்சில் விஜயன்: இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமண விழாவில் மரியாவுக்கு நாஞ்சில் விஜயன் தாலி கட்டும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட நாஞ்சில் விஜயன் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Nanjil Vijayan ties the knot with Maria in a grand wedding video trending

ஆவணி மாதம் ஆரம்பித்ததில் இருந்தே சினிமாவில் பல நட்சத்திரங்களுக்கு வரிசையாக திருமணம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் கவினுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது நாஞ்சில் விஜயன் தாலி கட்டி மாப்பிள்ளை ஆகி விட்டார்.

அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் விரைவில் கோலாகலமாக திருமணம் நடைபெற போவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆவணியில் எத்தனை பிரபலங்கள் தங்கள் வாழ்வில் அடுத்த ஸ்டேஜுக்கு போகப் போறாங்க என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Nanjil Vijayan ties the knot with Maria in a grand wedding video trending

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X