Nanjil Vijayan: படு ஜோராக நடந்த நாஞ்சில் விஜயன் ரிசப்ஷன்.. வாழ்த்து கூறிய பிரபலங்கள்!
சென்னை: நாஞ்சில் விஜயனின் திருமண வரவேற்பு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன், சிரிச்சா போச்சு, அது இது எது? உள்ளிட்ட நிகழ்ச்சியில் தனது அசாத்தியமான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார்.

இவருக்கு பெண் வேடங்கள் பக்காவாக பொருந்தி இருக்கும் என்பதால், பெரும்பாலும் இவர் பெண் வேடத்திலேயே காமெடி நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்திருப்பார்.
நாஞ்சில் விஜயன்: சின்னத்திரையில் பிரபலமான நாஞ்சில் விஜயன், வெள்ளித்திரையிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மக்களிடம் ஓரளவுக்கு பிரபலமான இவர், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். டிக் டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சூர்யா தேவியை தாக்கி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நிச்சயதார்த்த போட்டோ: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறியிருந்தார். அதே சமயம் மணமகளின் முகத்தை மறைத்து போட்டோவை போட்டு இருந்தார். இதனால், நாஞ்சில் விஜயன் வருங்கால மனைவி யார்? என தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதிகம் ஆர்வமாக இருந்தனர்.
திருமண வரவேற்பு: இரண்டு தினங்களுக்கு முன்பு நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. மரியா என்ற பெண்ணை நாஞ்சில் விஜயன் கரம் பிடித்துள்ளார். இந்த ஜோடியின் திருமண புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார். இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, நடிகர் ராஜ் கமல், அம்பானி ஷங்கர், சின்னத்திரை நடிகை ரேமா அசோக், தங்கதுரை மற்றும் விஜய்டிவி பிரபலங்கள், யூடியூப் பிரபலங்களான ஜிபி முத்து, டிராவலர் அஜீஸ் என பல யூடியூப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











