சிவாஜியாக மாறிய மம்முட்டி..‘நண்பகல் நேரத்து மயக்கம்‘ டீசர் ஸ்பெஷல் !

சென்னை : மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

பிரபல மலையான நடிகர் மம்முட்டி நடிக்கும் நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தை புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன், அசோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

இயக்குநர் லிஜோ ஜோஸ்

இயக்குநர் லிஜோ ஜோஸ்

கேரளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு என ஏராளமான படங்களை இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு வெறும் 19 நாட்களில் சுருளி என்ற படத்தை எடுத்து முடித்தார். இப்படம் கடந்த ஆண்டு சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நண்பகல் நேரத்து மயக்கம்

நண்பகல் நேரத்து மயக்கம்

தற்போது மம்மூட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டு கடந்த டிசம்பரில் படப்பிடிப்பு முடிந்தது தற்போது போஸ்ட்ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. மம்முட்டி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பனி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் பேனரின் கீழ் லிஜோவின் ஆமென் மூவி மடாலயத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

சிவாஜியாக மம்முட்டி

சிவாஜியாக மம்முட்டி

இந்நிலையில், 'நண்பகல் நேரத்து மயக்கம்' டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் நடிகர் மம்முட்டி, ஒரு மதுக்கூடத்தில் மதுஅருந்தி விட்டு சிவாஜி கணேசன் நடித்த கௌரவம் படத்தில் வரும் பிரபல வசனமான " அவன் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இடம் கோர்ட் என்று" சிவாஜியின் கர்ஜனைக்குரல் ஒலிக்க. இரட்டை வேட சிவாஜி கேரக்டரில் மாறி மாறி அந்த படத்தின் வசனத்தை பேசுகிறார் மம்முட்டி. இணையத்தில் வெளியான இந்த டீசர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இரு மொழிகளில்

இரு மொழிகளில்

நல்ல தூக்க பழக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு டிசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழகத்தை தொடர்பு படுத்தும் கதை என்பதால், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார், தீபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X