“நன்றி சின்னவரே“.. உதயநிதியை சூசகமாக பாராட்டிய பார்த்திபன்!

சென்னை : நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் உதயநிதியை சின்னவரே என அழைத்து பாராட்டி உள்ளார்.

Recommended Video

The Warrior | Ilaiyaraaja MP கலாய்த்த Parthiban

கலையின் மீது என்றும் தீராத தாகத்தோடு தொடர்ந்து புதுப்புது வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார் பார்த்திபன். கடந்த ஆண்டு அந்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுக்க இருக்கும். மற்ற கதாபாத்திரங்களின் முகம், உடல் எதுவுமே படத்தில் வராது அவர்களின் குரல் மட்டுமே வரும். இப்படம் பல பாராட்டுகளை பெற்று பல விருதுகளை வாரிக்குவித்தது.

சிங்கிள் ஷாட்டில்

சிங்கிள் ஷாட்டில்

இயக்குனர் பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இத்திரைலப்படத்தில் பணியாற்றி உள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் காட்சிகள் இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

அசாதாரண உழைப்பு

அசாதாரண உழைப்பு

முன்னதாக உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' திரைப்படத்தை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், சாதாரண திரைப்படம் எடுப்பதற்கே அசாதாரண உழைப்பு தேவைப்படுகிறது, அசாதாரணமான #IravinNizhal படத்தை எடுக்க rparthiepan சாரால் மட்டுமே முடியும். அவருக்கும் arrahman சார் உள்ளிட்ட 'இரவின் நிழல்' டீமுக்கும் என் வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.

நன்றி சின்னவரே

நன்றி சின்னவரே

உதயநிதி ஸ்டாலினின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன், சாதல் சாதாரணம். சாதித்தல் அசாதாரணம். அதற்கான முயற்சியும் உழைப்பும் சதா ரணம். கண்டுணர்ந்து பாராட்டுதல் பெருங்குணம். உயர்த்திப் பிடிக்க உதவுதல் உயர்குணம். இந்நிமிட கடைசி முதல், அடுத்த முதல் வரை அங்கீகாரமே ஆக்ஸிஜன். நன்றி சின்னவரே என பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X