50 வயதில் குழந்தையை பெற்ற பிரபல நடிகை.. என்னை தாயாக தேர்வு செய்த தேவதை என உருக்கம்!

லண்டன்: பிரபல இங்கிலாந்து நடிகை நவோமி கேம்பல் அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். அவருக்கு வயது 50.

Cool as Ice படத்தின் மூலம் 1991ம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நவோமி கேம்பல்.

இங்கிலாந்து நடிகையான இவர், சர்வதேச சூப்பர் மாடலாகவும் கலக்கி வருகிறார்.

50 வயதில் அம்மா

50 வயதில் அம்மா

பிரபல இங்கிலாந்து நடிகையும் சர்வதேச மாடல் அழகியுமான நவோமி கேம்பல் தனது 50வது வயதில் முதன்முறையாக அழகான பெண் குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார். பல ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்த அவர், கடந்த செவ்வாயன்று தனது குழந்தையின் பாதங்களை மட்டுமே காட்டியபடி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கணவர்களும் காதலர்களும்

கணவர்களும் காதலர்களும்

1998ம் ஆண்டு இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஃபிளாவியோ பிரியாட்டோர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவோமி, 2003ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டார். அதன் பின்னர் கடந்த 2009ம் ஆண்டு விளாடிஸ்லாவ் டோரோனின் எனும் ரஷ்ய தொழிலதிபரை மணந்து கொண்டார். 2013ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து கொண்டார். அதுமட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நீரோ, லியாம் பெய்னே, ஸ்கெப்டா என ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களுடனும் உறவில் இருந்துள்ளார்.

சர்வதேச பிரபலம்

சர்வதேச பிரபலம்

கேர்ள் 6, இன்வேஷன் ஆஃப் பிரைவசி, அலி ஜி இந்தியா ஹவுஸ், தி கால், ஜூ லேண்டர் 2, பிளாக் இஸ் கிங் என ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் இவர். மேலும், சர்வதேச மாடல் அழகியான இவர், ஏகப்பட்ட ஃபேஷன் பிராண்ட் நிறுவனங்களுக்காக பணியாற்றியுள்ளார்.

தாயாக தேர்வு செய்த தேவதை

தாயாக தேர்வு செய்த தேவதை

50 வயதாகும் நவோமி கேம்பல் அழகான பெண் குழந்தைக்கு அம்மாவாகி உள்ள நிலையில், அது தொடர்பாக செவ்வாயன்று குழந்தையின் பாதங்கள் மட்டுமே தெரியும் வண்ணம் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, "A beautiful little blessing has chosen me to be her mother." என கேப்ஷன் கொடுத்து ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

நீண்ட நாட்கள் தவம்

நீண்ட நாட்கள் தவம்

நவோமியின் தாயார் வெலரி மோரிஸ் கேம்பல், இப்படியொரு தருணத்திற்காக பல ஆண்டுகளாக தவம் கிடந்து காத்திருந்ததாக கூறியுள்ளார். பேத்தி பிறந்துள்ள சந்தோஷத்தில் பாட்டி செம உற்சாகம் அடைந்துள்ளார். குழந்தையின் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்கள் எதையுமே நவோமி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X