மூன்று முறை அபார்ஷன்.. மகன் தனுஷ் பற்றி நெப்போலியன் நெகிழ்ச்சி.. இவ்வளவு நடந்திருக்கா?

சென்னை: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. இதில் திரையுலக நட்சத்திரங்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அக்‌ஷயா என்ற பெண்ணை மணந்திருக்கிறார் தனுஷ். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவரும் சூழலில்; நெப்போலியன் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது மட்டுமின்றி பலரை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர் நெப்போலியன். அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷுக்கு சிறு வயது முதலே தசை சிதைவு நோய் இருந்தது. முதலில் இந்தியாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனையடுத்து அவரது சிகிச்சைக்காக தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டிலான நெப்போலியன்; அங்கு மென்பொருள் நிறுவனத்தை நடத்திக்கொண்டே விவசாயத்தையும் பார்த்துவருகிறார்.

napolean dhanush

தனுஷின் திருமணம்: சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் நடத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அக்‌ஷயா என்ற பெண்ணை தனுஷுக்கு மனைவியாக தேர்ந்தெடுத்தார் நெப்போலியன். நிச்சயதார்த்தம் இந்தியாவில் நடந்தது. திருமணம் ஜப்பானில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இத்திருமணத்துக்காக ராதிகா, குஷ்பூ, மீனா, கலா மாஸ்டர், சரத்குமார், பாண்டியராஜன் என 80ஸ், 90ஸ் ஸ்டார்ஸ் ஜப்பான் சென்றனர். மேலும் 2கே ஸ்டாரான சிவகார்த்திகேயன் வீடியோ மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.

செம செலவு: திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் தங்குவதற்காக ஹில்டன் ஹோட்டலில் ரூம் புக் செய்திருந்தார் நெப்போலியன். மேலும் திருமணத்துக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய்வரை மொத்தம் அவர் செலவு செய்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இதற்கிடையே தனுஷின் திருமணத்தை பலரும் விமர்சனம் செய்தார்கள். அந்த சமயத்தில் தனுஷும், நெப்போலியனும் தக்க பதிலடியை ஹேட்டர்ஸுக்கு கொடுத்திருந்தனர். தனது மகன் திருமணம் முடிந்தபோது மேடையில் நின்றிருந்த நெப்போலியனின் கண்களும் கலங்கின.

தனுஷின் க்யூட்னெஸ்: திருமணத்துக்கு பிறகு தனுஷும், அக்‌ஷயாவும் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தாங்கள் இருவரும் பேபி என்றுதான் அழைத்துக்கொள்வோம்; ஒருவருக்கொருவர் சினிமா பாடல்களை இன்னும் டெடிகேட் செய்துகொள்ள ஆரம்பிக்கவில்லை; விரைவில் அது நடக்கும் என்று கூறியிருந்தார் தனுஷ். மேலும் தனுஷ் ஒரு ஈமெயிலில்தான் அவருடைய காதலை தன்னிடம் சொன்னதாகவும்; உடனடியாக நான் அக்செப்ட் செய்துவிட்டேன் என்றும் அக்‌ஷயாவும் தெரிவித்திருந்தார்.

நெபோலியன் பேட்டி: சூழல் இப்படி இருக்க நெப்போலியன் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "எனக்கு திருமணமான புதிதில் எனது மனைவி ஜெயசுதாவையும் ஷூட்டிங்கிற்கு அழைத்து செல்வேன். தொடர்ந்து அவர் பயணம் செய்துகொண்டே இருந்ததால் மூன்று முறை அவருக்கு கரு கலைந்துவிட்டது. நான்காவது முறை அவர் கர்ப்பமானபோது எங்கேயும் போகாமல் இருந்தோம். எங்களுக்கு திருமணமாகி ஐந்தாவது வருடத்தில் பிறந்த குழந்தைதான் தனுஷ். அதனால் அவன் எப்போதும் எங்களுக்கு ஒரு பொக்கிஷமான குழந்தைதான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X