அட சூப்பரா இருக்கே.. ட்ரெண்டாகும் நெப்போலியனின் குடும்ப புகைப்படம்.. மனைவி, மகன்கள் இவர்கள்தான்
சென்னை: நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற ஹீரோவாக வலம் வந்தவர். நடிகராக மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். சூழல் இப்படி இருக்க தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியலிலிருந்து ஒதுங்கி அமெரிக்காவில் தற்போது செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில்கூட அவரது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குமரேசன் என்ற இயற்பெயரை கொண்ட நெப்போலியன் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு சினிமா ஆசை துளிர்விட முதல் படமே பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு நெப்போலியன் என்று பெயர் வைத்தது பாரதிராஜாதான் என்பது கவனிக்கத்தக்கது.

இன்னொரு உதாரணம்: பாரதிராஜாவின் அறிமுகம் என்றாலே யாரும் சோடை போனதில்லை என்பதற்கான இன்னொரு உதாரணம்தான் நெப்போலியன். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது சாமானியத்தனமான குரலாலும், அழகாலும் ரசிகர்களை ஈர்த்தார்.
பல படங்கள்: 1991ஆம் ஆண்டு அறிமுகமான நெப்போலியனுக்கு அடுத்த வருடமான 1992ஆம் ஆண்டு ஜோராக அமைந்தது. அந்த வருடத்தில் மட்டும் சின்னத்தாயி, பரதன், நாடோடி தென்றல், ஊர் மரியாதை, இது நம்ம பூமி, முதல் சீதனம், தலைவாசல், பங்காளி, அபிராமி என மொத்தம் 9 படங்கள் நடித்து படு பிஸியாக வலம் வந்தார். அது மற்ற நடிகர்களை ஆச்சரியப்படுத்தியது என்பதுதான் உண்மை.
எஜமான்: அதேபோல்தான் 1993ஆம் ஆண்டும் அவருக்கு அமைந்தது. அந்த வருடத்தில்தான் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக எஜமான் படத்தில் நடித்தார். வல்லவராயன் என்ற கதாபாத்திரத்துக்கு தனது மிகச்சிறந்த நடிப்பால் உயிர் கொடுத்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருப்பார். தொடர்ந்து அவர் நடித்த கிழக்கு சீமையிலே படமும் அவரது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக உருமாறி நிற்கிறது.அதேபோல் அவர் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படமும் மெகா ஹிட்டானது.

அமெரிக்காவில் செட்டில்: சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஒருகட்டத்தில் தனது மகனுக்கு தசை சிதைவு நோய் வர இந்தியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு தனது மகனுக்கு சிகிச்சை அளித்து அவருக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார். அவ்வப்போது இந்தியா வரும் அவர் சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். மகன் தனுஷ் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர் நெப்போலியன். சில மாதங்களுக்கு முன்பு அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. அதில் நடிகைகள் மீனா, குஷ்பூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ட்ரெண்டாகும் புகைப்படம்: சில மாதங்களுக்கு முன்பு டாக் ஆஃப் தி இண்ட்டெர்நெட்டாக வலம் வந்தார் நெப்போலியன். அவர் பிறந்தநாள் மட்டுமின்றி அவரது மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் நெப்போலியனின் குடும்பப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. அதில் தனது மனைவி ஜெயசுதா மற்றும் மகன்களான தனுஷ் மற்றும் குணால் ஆகியோருடன் இருக்கிறார்.
தற்போது இருக்கும் புகைப்படங்கள் மட்டுமின்றி இரண்டு மகன்களும் பிறந்த சமயத்தில் எடுத்த புகைப்படங்களும் க்யூட்டாக இருக்கின்றன. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தனுஷ் நீண்ட ஆயுளுடனும் நெப்போலியனின் அன்பின் துணையுடனும் வாழ வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











