எதுக்காக இந்தப் பெண் தெரியுமா?.. மகன் திருமணம்.. முதன்முறையாக மனம் திறந்த நெப்போலியன்

சென்னை: நடிகர் நெப்போலியன் 90களில் பிரபலமான நடிகராக இருந்தவர். ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்த அவர், போக்கிரி படத்தில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் இருந்த அவர்; இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க விரைவில் அவருக்கு திருமணமும் நடக்கவிருக்கிறது.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானவர் நெப்போலியன். முதல் படமே இயக்குநர் இமயத்தின் இயக்கம் என்பதால் நடிப்பை சரியாகவே கொடுத்திருந்தார். அதற்கு பிறகு எஜமான், சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே என பல படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச்சிறப்பாக செய்யக்கூடியவர் நெப்போலியன்.

Dhanush Napolean

அமெரிக்காவில் செட்டில்: நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தனது தடத்தை பதித்த அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரில் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லாததால்; அவரது வசதிக்காகவும், சிகிச்சைக்காகவும் அமெரிக்கா சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்தச் சூழலில் தனுஷுக்கு மிக விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

ஜப்பானில் திருமணம்: தனுஷின் உடல்நிலை காரணமாக அவரால் விமானத்தில் பயணம் செய்து இந்தியா வர முடியாது. கப்பலில் வந்தாலும் நீண்ட நாட்கள் ஆகும். எனவே திருமணத்தை ஜப்பானில் வைக்க திட்டமிட்டிருக்கிறார் நெப்போலியன். அதுகுறித்த அறிவிப்பை மிக சமீபத்தில்தான் அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுக்கு திருமணம் நடக்கவிருப்பதுதான் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படுகிறது.

அவதூறாக பேசும் சிலர்: முக்கியமாக தனுஷின் உடல்நிலையை காரணம் காட்டி பயில்வான் ரங்கநாதன், தமிழா தமிழா பாண்டியன் உள்ளிட்ட சிலர் அவதூறாக பேசினர். ஆனால் தனுஷுக்கு திருமணம் நடக்கவிருப்பது மகிழ்ச்சியான விஷயமே. எனவே அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர்தான் தனுஷின் திருமண பத்திரிகை தொடர்பான வீடியோ வெளியானது. அது ஓலைச்சுவடி வடிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நெப்போலியன் ஓபன்: இந்நிலையில் திருமணம் குறித்து பேசியிருக்கும் நெப்போலியன், "நான் எனது மகனின் உடல்நிலைக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும்; எனக்கு வரவேண்டிய மருமகள் தமிழ்நாட்டிலிருந்துதான் வரவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் தனுஷுக்கு திருநெல்வேலியிலிருந்து பெண் எடுத்தேன். அக்‌ஷயா மிகவும் நல்ல பெண்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X