நெப்போலியன் சொத்தையே 2வது மகன் அழித்து விடுவார்னு சொன்ன பிரபலம்.. அவரோட திருமண ஆசை தெரியுமா?
சென்னை: நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷுக்கு ஜப்பானில் கோலாகலமாக திருமணத்தை நாளை நடத்த திட்டமிட்டுள்ளார். ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில், நெப்போலியனின் 2வது மகன் குணால் தன்னுடைய திருமணம் எங்கே எப்படி நடக்க வேண்டும் என்கிற விருப்பத்தைக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து அசத்தியவர். அமெரிக்காவுக்கு சென்ற அவர் அங்கே அரசியல்வாதியாகவும் ஜொலித்தார். ஆனால், அனைத்தையும் தனது மகன் தனுஷுக்காக உதறிவிட்டு மகனை கவனித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் பாதிப்பு உள்ள நிலையில், திருமணமே நடைபெறாது எனக் கூறப்பட்ட நிலையில், தனது மகனுக்கு பல இடங்களில் பெண் தேடி வந்த நெப்போலியன் அக்ஷயா என்பவரை சம்மதிக்க வைத்து இந்த திருமணத்தை ஜப்பானில் நடத்தவுள்ளார்.
தனுஷ் திருமணம்: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் திருமண விழா ஜப்பானில் களைகட்டியிருக்கிறது. மீனா, ராதிகா, சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை கலா மாஸ்டர் ஏற்றுள்ளார். நடிகர் நெப்போலியன் அனைத்து ஏற்பாடுகளையும் தனது மகனுக்காக தானே ஓடோடி சென்று செய்து வருவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் உள்ளனர்.
2வது மகனின் திருமண ஆசை: அண்ணன் தனுஷுக்கு திருமணம் ஆகவுள்ள நிலையில், அடுத்ததாக தம்பி குணால் எங்கே எப்படி திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறாய் என கலா மாஸ்டர் கேட்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் நிலவில் திருமணம் நடத்தலாம் எனக் கூறியுள்ளார். நிலவுக்கு உன்னால் செல்ல முடியுமா குணால் என கலா மாஸ்டர் கேட்க, எதிர்காலத்தில் செல்ல முடியும் என்று அவரும் கூறியுள்ளார்.
அப்பா சொத்தையே அழிச்சிடுவ: நெப்போலியனின் சொத்தையே அழிச்சுடுவான் போல இருக்கேன்னு நிலவுல திருமணத்தை நடத்த வேண்டும் என குணால் சொன்னதை கேட்டு ஷாக்கான கலா மாஸ்டர் அப்படியே ஓபனாக சொல்லிவிட்டார். மூத்த மகன் தனுஷ் திருமணத்துக்கே பல நூறு கோடிகளை நெப்போலியன் செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு மகன்களுக்கும் பணத்தின் அருமையே தெரியவில்லை என்றும் செல்வ செழிப்புடன் இருப்பதால் தான் இப்படி ஜப்பானிலும், நிலவிலும் திருமணம் நடத்த ஆசைப்படுகின்றனர் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











