நெப்போலியன் மகன் திருமணம்.. ஜப்பானுக்கு கப்பலில் பயணம்.. அடேங்கப்பா.. உள்ளே ஒரு உலகமே இருக்கே!
சென்னை: நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷுக்கு ஜப்பானில் திருமணம் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு சாலை வழிப்பயணமாக குடும்பத்துடன் சென்றார். அங்கிருந்து கப்பல் மூலம் தற்போது ஜப்பானுக்கு பயணப்பட்டு வருகிறார்.
7 நாட்களாக கடலில் கப்பல் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் நெப்போலியன் தங்கள் கப்பலில் உள்ள வசதிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

வரும் நவம்பர் மாதம் தனுஷ் மற்றும் அக்ஷயா திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக நடிகர் நெப்போலியன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் கடல் வழியாக பயணம் செய்துக் கொண்டிருக்கிறார்.
அரியவகை நோய் பாதிப்பு: தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் தான் நடிகர் நெப்போலியன். அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் தனது மகன் தனுஷின் திருமணத்தை எப்படியாவது நடத்தி முடித்தாக வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இயங்கி வருகிறார். அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனுஷை திருமணம் செய்துக் கொள்ள அக்ஷயா என்பவர் முன் வந்துள்ள நிலையில், இருவரின் திருமணமும் ஜப்பானில் நடைபெற உள்ளது.
கப்பலில் பயணம்: அமெரிக்காவிலேயே திருமணத்தை நடத்தியிருக்கலாமே என பலரும் கேள்வி எழுப்பினாலும் ஜப்பானில் தனது மகனின் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ள நெப்போலியன் குடும்பத்துடன் தற்போது கப்பலில் ஜப்பானுக்கு பயணம் செய்துக் கொண்டிருக்கிறார். ரயில், கார் மூலம் பயணம் செய்து கப்பலுக்குச் சென்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டு வந்த நெப்போலியன் தற்போது கடலில் கப்பலில் குடும்பத்துடன் செல்லும் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

பெரிய நீச்சல் குளம்: கப்பலில் 10 மற்றும் 11வது டெக்கில் தான் அனைத்து ஆக்டிவிட்டிகளையும் செய்ய முடியும் என அந்த வீடியோவில் நெப்போலியன் கூறியுள்ளார். பெரிய நீச்சல் குளம் மற்றும் பலர் சன் பாத் எடுக்க வசதியான சாய்வு நாற்காலிகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் கப்பலை சுற்றி நடைபயிற்சி செய்யவும், ஓடவும் வழி செய்து வைத்துள்ளார்கள் என்பதையும் நெப்போலியன் அந்த வீடியோவில் காட்டியுள்ளார்.
சமைக்க டிரெய்னிங்: கப்பலில் சமைக்க விருப்பப்படுவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கு தனது குடும்பத்தினர் பெயர் கொடுத்து உள்ளே சென்றனர். அவர்கள் உள்ளே சென்றதும் நான் நல்ல உணவு சாப்பிட ரெஸ்டாரன்ட்டுக்கு வந்து விட்டேன். ஆனால், பின்னாடியே மொத்த குடும்பமும் அங்கே சாப்பிட வந்துட்டாங்க என நெப்போலியன் ஜாலியாக சிரித்துக் கொண்டே புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்னும் சில நாட்கள் கப்பல் பயணத்தில் ஏற்படும் அனுபவங்களை வீடியோக்களாக நெப்போலியன் பகிர்வார் என்றே தெரிகிறது.

பல கோடி செலவு: நெப்போலியன் தனது மகன் தனுஷின் திருமணத்துக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வரும் நெப்போலியன் 200 கோடிக்கும் அதிகமான செலவை திருமணத்துக்காக செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பானில் நடைபெறவுள்ள தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் எப்படி எல்லாம் நடக்கப் போகிறது என்பதை காண தமிழ் சினிமா ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பல பிரபலங்களுக்கும் நெப்போலியன் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











