திருமணமே நடக்காதுன்னு சொன்னவர்களின் வாயை அடைத்த நெப்போலியன்.. தாலி கட்டியதும் கதறிட்டாரு மனுஷன்!
சென்னை: தசை சிதைவு நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் திருமணம் இன்று ஜப்பானில் இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. தாலியை எடுத்து மணமகள் கழுத்தில் கட்ட முடியாத நிலையில் இருந்தாலும் செயின் போன்ற தங்க தாலியை தனுஷ் எடுத்துக் கொடுக்க உறவினர்கள் மணமகள் அக்ஷயா கழுத்தில் அணிவிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தனது மகனின் திருமணத்துக்காக கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்த நடிகர் நெப்போலியன் தனது மகன் திருமணம் நடைபெற்றதை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சிகள் ரசிகர்களை உருக வைத்துள்ளன.

சரத்குமார், ராதிகா, மீனா, குஷ்பு, கலா மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்துக்காக ஜப்பான் சென்ற நிலையில், சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் வீடியோ காலில் வந்து மணமக்களை வாழ்த்தியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
நெப்போலியன் மகன் திருமணம்: ஹல்தி, மெஹந்தி, சங்கீத் என அனைத்து விதமான திருமண சடங்குகளையும் நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஜப்பானிலேயே நடத்தி வைத்து கலா மாஸ்டர் அசத்தியுள்ளார். சினிமா பிரபலங்கள் நடனமாடிய சங்கீத் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்ற நிலையில், இன்று காலை தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
கண்கலங்கிய நெப்போலியன்: தனது மகன் தசை சிதைவு பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், அவனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என கடந்த ஒரு வருடமாக நெப்போலியன் ஓடாத ஓட்டமும் அவர் சந்திக்காத மனவலியும் இருக்கவே முடியாது. ஏகப்பட்ட ஏளனங்களையும் வசைபாடுகளையும் கடந்து தனது மகன் தனுஷுக்கு சிறப்பாக ஜப்பானில் அக்ஷயா என்பவருடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
தனுஷ் ஹேப்பி: அக்ஷயா தனக்கு மனைவியாக கிடைத்தது ரொம்பவே சந்தோஷம் என பேசிய தனுஷ். அனைவரையும் அவர் அன்பால் அரவணைப்பது ரொம்பவே பிடித்திருக்கிறது என்றார். தனது தந்தை தனக்காக ஏகப்பட்ட ஐடியாக்களை பண்ணி திருமணம் செய்து வைத்துள்ளார் என்றார். நெப்போலியனின் மனைவி ஜெயசுதாவும் தனது மகன் தனுஷ் திருமணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
தம்பி ஹேப்பி: அண்ணன் தனுஷுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பி குணால் ரொம்பவே ஹேப்பியாக சிரித்து திருமணத்தை என்ஜாய் செய்த காட்சிகளையும் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். தனுஷ் மற்றும் அக்ஷயா இதே போல சந்தோஷமாக எப்போதும் இருக்க வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











