அமெரிக்காவை விட்டு கிளம்பிய நெப்போலியன்.. மகனுக்காக எந்த எல்லைக்கும் போறாரே.. செம நெகிழ்ச்சி
சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷுக்கு விரைவில் ஜப்பானில் திருமணம் நடைபெறவிருக்கிறது. திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை அவர் மணக்கவிருக்கிறார். சமீபத்தில் நடந்த இருவரின் நிச்சயதார்த்தத்தில் தனுஷ் வீடியோ காலில் கலந்துகொண்டார். அவரால் விமானத்தில் பயணித்து இந்தியாவுக்கு வர முடியாத சூழல் காரணமாக ஜப்பானில் திருமணம் வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களது திருமணம் நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமான அவர் எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். எஜமானில் அவர் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் இன்றுவரை சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும் அளவுக்கு நெப்போலியன் அந்த கேரக்டரில் அருமையாக நடித்திருப்பார். ஒருகட்டத்தில் ஹீரோவுக்கான வாய்ப்புகள் அவருக்கு குறைந்ததை அடுத்து குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அரசியலில் நெப்போலியன்: அவர் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் பிஸியாக இருந்தவர். திமுகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராக இருந்த நெப்போலி; அந்தக் கட்சியிலிருந்து விலகி பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் அரசியலிலிருந்தும் ஒதுங்கிய நெப்போலியன் தனது குடும்பத்துடன் சென்று அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது இந்தியா வரும் அவர் ஒருசில படங்களில் நடிக்க கமிட்டாகிவருகிறார்.
ஏன் அமெரிக்காவில் ?: நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள். இவர்களில் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் வைத்து மருத்துவம் பார்த்து அது சரி வராததால்; அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்கள். அங்கு தனுஷுக்கு தேவையான சிகிச்சைகள் கிடைப்பதன் காரணமாக அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட ஒரு வீடியோ மூலம் நெப்போலியனின் மறுபக்கம் முழுமையாக பொதுவெளிக்கு தெரிந்தது.
தனுஷுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை அவர் மணமுடிக்க இருக்கிறார். சமீபத்தில்தான் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது. ஆனால் அந்த நிச்சயதார்த்தத்தில் தனுஷ் வீடியோ காலில் கலந்துகொண்டார். மேலும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வரமுடியாத காரணத்தினாலும்; கப்பலில் வந்தா ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதாலும் ஜப்பானில் திருமணம் நடக்கவிருக்கிறது.
ஜப்பான் சென்ற நெப்போலியன்: இந்நிலையில் தனது மகன் திருமணத்துக்காக அமெரிக்காவிலிருந்து தனது குடும்பத்துடன் கிளம்பி ஜப்பான் சென்றிருக்கிறார் நெப்போலியன். தனுஷால் விமானத்தில் செல்ல முடியாது என்பதால் கப்பலில் எல்லோரும் ஜப்பானுக்கு செல்கிறார்கள். அவர்கள் கிளம்பும் செய்தியை அறிந்து நெப்போலியனின் நண்பர்கள் பலர் வீட்டுக்கு வந்து வழியனுப்பி வைத்தனர். அதுதொடர்பான வீடியோவை நெப்போலியனும் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன், நண்பர்களை பற்றி பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











