ஜப்பானில் திருமணம் ஓவர்.. அடுத்து ஹனிமூனுக்கு நெப்போலியன் மகனும் மருமகளும் எங்க போறாங்க தெரியுமா?
சென்னை: நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷுக்கு அக்ஷயா என்கிற பெண்ணுடன் திருமணத்தை ஜப்பானில் ஜாம் ஜாம் என செய்து முடித்துள்ளார். பணம் இருந்தால் உடலில் எப்படிப்பட்ட பிரச்சனை இருந்தாலும் இந்த பிரபலங்கள் திருமணத்தைக் கூட செய்து விடுகின்றனர் என்றும் பணத்துக்காக ஆசைப்பட்டு அக்ஷயா தனுஷை திருமணம் செய்துக் கொள்கிறார் என்றும் இவர்களுக்கு திருமணம் ஆனால், தாம்பத்ய உறவு எப்படி இருக்கும் என ஏகப்பட்ட கிண்டல்களும் கேலிகளும் சோஷியல் மீடியாவில் கிளம்பின.
தனுஷுக்கு பொண்ணே கிடைக்காது என்றும் இவரை எல்லாம் யாரு திருமணம் செய்துக் கொள்வார் என்று சொல்லிய வாய்களை அடைத்த சந்தோஷத்தில் நெப்போலியன் திருமண மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் வடித்தார். கப்பல் வழியாக பயணம் செய்ய முடியும் என்பதால் தனுஷ் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு பயணம் செய்து திருமணத்தை முடித்துள்ளார்.

திருமணம் முடிந்த நிலையில், அடுத்து ஹனிமூனுக்கு தனுஷ் மற்றும் அக்ஷயா எங்கே செல்லவுள்ளனர் என்பது குறித்த தகவல்களும் கசிந்துள்ளன.
ஜப்பானில் திருமணம் ஓவர்: நடிகர் நெப்போலியனுக்கும் அவரது மனைவி ஜெயசுதாவுக்கும் இரு மகன்கள் உள்ளனர். தனுஷ் மற்றும் குணால் இருவரும் அறிவில் சிறந்தவர்களாக உள்ள நிலையில், தசை சிதைவு பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்ட தனுஷ் அக்ஷயா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தனது மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடிப் பிடித்து ஜப்பானில் திருமணத்தை முடித்துள்ளார் நெப்போலியன்.
ஹனிமூன் எங்கே?: ஜப்பானில் திருமணத்தை முடித்து விட்டு நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து கிளம்பி சிங்கப்பூருக்குச் செல்லவுள்ளதாகவும் சிங்கப்பூரில் தான் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் ஹனிமூன் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. நடிகர் நெப்போலியன் சென்னைக்கு வரவும் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
தனுஷ் ரொம்ப ஹேப்பி: தனக்கு திருமணத்தை பல தடைகளை பல வசவு சொற்களை தாண்டியும் தனது அப்பா நெப்போலியன் இந்தளவுக்கு மெனக்கெட்டு செய்திருப்பதை அறிந்து தனுஷ் ரொம்பவே ஹேப்பியாக உள்ளார். அவருக்கு நல்ல தோழியாகவே அக்ஷயா அமைந்துள்ள நிலையில், இருவரும் சேர்ந்துக் கொண்டு சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











