திருமணத்துக்கு பின் செம ஹேப்பி.. நெப்போலியன் மகன் - அக்‌ஷயா எங்கே போயிருக்காங்க பாருங்க

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷுக்கு தசை சிதைவு நோய். சூழல் இப்படி இருக்க கடந்த வாரம் அவர் அக்‌ஷயா என்ற பெண்ணை ஜப்பானில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அத்திருமணத்தில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க இருவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷுக்காக அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு தனியாக விவசாயம் செய்துவரும் அவர்; சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றையும் தொடங்கி நடத்திவருகிறார். அதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் மட்டுமே வேலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. அந்தக் கம்பெனிக்கு தனுஷ்தான் CEO என்று கூறப்படுகிறது. வீல் சேரில் இருந்தாலும் அனைத்துவிதமான வேலைகளையும் அவரால் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கணக்கு வழக்குகளை நெப்போலியனின் மனைவி கவனித்துக்கொள்கிறார்.

dhanush napolean akshaya

திருமணம்: சூழல் இப்படி இருக்க தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் நெப்போலியன். அதன்படி அக்‌ஷயா என்ற பெண்ணுடன் தனுஷுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனையடுத்து அமெரிக்காவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்; அங்கு சில சட்ட சிக்கல்கள் எழுந்ததன் காரணமாக மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்துவதற்கு திட்டமிட்டு; தனது குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து கப்பலில் ஜப்பானுக்கு சென்றார் நெப்போலியன்.

செம திருமணம்: அதனையடுத்து ஜப்பானில் அவர்களது திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ராதிகா, குஷ்பூ, மீனா, சரத்குமார், பாண்டியராஜன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். நெப்போலியன் பாஜகவில் இருந்தாலும் அக்கட்சியிலிருந்து யாரும் தனுஷின் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஹில்டன் ரூமில் காஸ்ட்லியாக ரூம் போட்டிருந்தார். மேலும் திருமணத்துக்கு வந்தவர்கள் ஆடி பாடி மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

மீண்டும் திருமணம்: ஜப்பானில் நடந்ததால் அமெரிக்காவில் நெப்போலியனின் நண்பர்கள் பலரால் கலந்துகொள்ள முடியவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் நெப்போலியன் அளித்த பேட்டி ஒன்றில் இன்னும் ஆறு மாதங்களில் அமெரிக்காவில் தனுஷ் - அக்‌ஷயா திருமணம் மீண்டும் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் தனது மகனின் சந்தோஷத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் எமோஷனலாக அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் இருவருக்குமான திருமணம் முடிந்த சூழலில்; மணமக்களை முறைப்படி வீட்டுக்கு அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தனுஷின் தாய் சுதா மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களீல் ட்ரெண்டாகியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் இருவரும் செம மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே மகிழ்ச்சியோடு வாழும் காலம்வரை இரண்டு பேரும் இருக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X