நெப்போலியன் மகன் நிச்சயதார்த்த ஆல்பம் பார்த்தீங்களா?.. ட்ரெண்டாகும் செம வீடியோ
சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷுக்கு விரைவில் ஜப்பானில் திருமணம் நடைபெறவிருக்கிறது. திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை அவர் மணக்கவிருக்கிறார். சமீபத்தில் நடந்த இருவரின் நிச்சயதார்த்தத்தில் தனுஷ் வீடியோ காலில் கலந்துகொண்டார். அவரால் விமானத்தில் பயணித்து இந்தியாவுக்கு வர முடியாத சூழல் காரணமாக ஜப்பானில் திருமணம் வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமான அவர் எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். எஜமானில் அவர் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் இன்றுவரை சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும் அளவுக்கு நெப்போலியன் அந்த கேரக்டரில் அருமையாக நடித்திருப்பார். ஒருகட்டத்தில் ஹீரோவுக்கான வாய்ப்புகள் அவருக்கு குறைந்ததை அடுத்து குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அரசியலில் நெப்போலியன்: அவர் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் பிஸியாக இருந்தவர். திமுகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராக இருந்த நெப்போலியன்; அந்தக் கட்சியிலிருந்து விலகி பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் அரசியலிலிருந்தும் ஒதுங்கிய நெப்போலியன் தனது குடும்பத்துடன் சென்று அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது இந்தியா வரும் அவர் ஒருசில படங்களில் நடிக்க கமிட்டாகிவருகிறார்.
ஏன் அமெரிக்காவில்?: நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள். இவர்களில் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் வைத்து மருத்துவம் பார்த்து அது சரி வராததால்; அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்கள். அங்கு தனுஷுக்கு தேவையான சிகிச்சைகள் கிடைப்பதன் காரணமாக அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். யூட்யூபர் இர்ஃபான் வெளியிட்ட ஒரு வீடியோ மூலம் நெப்போலியனின் மறுபக்கம் முழுமையாக பொதுவெளிக்கு தெரிந்தது.
தனுஷுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை அவர் மணமுடிக்க இருக்கிறார். சமீபத்தில்தான் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது. ஆனால் அந்த நிச்சயதார்த்தத்தில் தனுஷ் வீடியோ காலில் கலந்துகொண்டார். மேலும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வரமுடியாத காரணத்தினாலும்; கப்பலில் வந்தா ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதாலும் ஜப்பானில் திருமணத்தை செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நிச்சயதார்த்த ஆல்பம்: இந்நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தனுஷின் நிச்சயதார்த்தத்தை புகைப்படம் எடுத்த நிறுவனம் அதனை ஆல்பமாக தயாரித்து நெப்போலியன் மற்றும் குடும்பத்தாரிடம் வழங்கியது. அதுதொடர்பான வீடியோவை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக் சீனிவாசன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ஒட்டுமொத்த நெப்போலியனின் குடும்பமும் ஹேப்பியாக இருக்கிறது.
எழுந்த விமர்சனங்கள்: இதற்கிடையே தனுஷின் திருமணத்தை வைத்து பலரும் பலவாறு விமர்சித்துவருகின்றனர். முக்கியமாக தனுஷின் உடல்நிலையை காரணம் காட்டி அவருக்கு திருமணம் தேவையில்லாத ஒன்று; ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்கிற தொனியில் பயில்வான் ரங்கநாதன், தமிழா தமிழா பாண்டியா உள்ளிட்டோர் தொடர்ந்து பேசிவருவது தேவையற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











