யப்பா செம காதல்.. மனைவியுடன் செம ரொமான்ஸில் நெப்போலியன் மகன்.. களைகட்டும் திருமணம்

சென்னை: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் நாளை ஜப்பானில் நடக்கவிருக்கிறது. அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை மணமுடிக்கவிருக்கிறார். திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மீனா, ராதிகா, கலா மாஸ்டர், சரத்குமார் உள்ளிட்டோர் ஜப்பான் சென்றிருக்கிறார்கள். இந்தச் சூழலில் தனுஷ், அக்‌ஷயா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி அரசியல்வாதியாகவும் தனது தடத்தை பதித்தவர். அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்தவரான தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. அவரது சிகிச்சைக்காக இந்தியாவை விட்டு சென்று குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலானார் நெப்போலியன். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஓரளவு பயனை தந்திருக்கிறது.

napolean dhanush

சாஃப்ட்வேர் கம்பெனி: மேலும் அங்கு விவசாய நிலங்களை வைத்திருக்கும் நெப்போலியன்; ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி அதற்கு தனுஷை முதலாளியாக்கினார். அந்த நிறுவனத்தில் தமிழர்கள் ஏகப்பட்ட பேர் பணிபுரிவதாக கூறப்படுகிறது. அமர்ந்த இடத்திலிருந்தே தொழில்நுட்பத்தின் வசதியோடு அந்த நிறுவனத்தை நிர்வகித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து; நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அக்‌ஷயா என்பவரை பார்த்திருக்கிறார்.

ஜப்பானில் திருமணம்: இருவரது நிச்சயதார்த்தம் முடிந்த சூழலில் அவர்களது திருமணம் ஜப்பானில் நடக்கவிருக்கிறது. நாளை நடக்கவிருக்கும் இந்தத் திருமணத்துக்கு தமிழ்நாட்டிலிருந்தும் பிரபலங்கள் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் மீனா, கலா மாஸ்டர், சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன்பு ஜப்பானுக்கு சென்றனர். அவர்களை நெப்போலியன் ஜப்பான் விமான நிலையத்துக்கு சென்று அன்போடு வரவேற்றார். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகின.

கலா மாஸ்டர் பொறுப்பு: திருமண நிகழ்ச்சியை பிஹைண்ட்வுட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மேலும் திருமணத்தில் சங்கீத், ஹல்தி, மெஹந்தி ஆகிய நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. இதில் சங்கீத் நிகழ்ச்சியை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்தி கொடுக்கிறார். மேலும் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் அதில் நடனமாட வாய்ப்புகள் இருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. கலா இந்த பொறுப்பை ஏற்றது தனக்கு பெரும் பாக்கியம் என்று நெப்போலியன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் நாளை திருமணம் நடக்கவிருக்கும் சூழலில் தனுஷும், அக்‌ஷயாவும் ஃபோட்டோஷூட் எடுத்துக்கொண்டார்கள். அதில் பிங்க் நிறத்தில் இருவரும் உடை அணிந்திருக்கிறார்கள். மேலும் இருவரும் ஜோடியாக வரும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமாக இரண்டு பேரின் முகத்திலும் காதல் அவ்வளவு வழிந்தோடுவதாகவும்; இதே சந்தோஷத்தோடு நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்று ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X