வாவ் செம.. முடிந்தது நெப்போலியன் மகன் திருமணம்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.. குவியும் வாழ்த்து

சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷுக்கு இன்று ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. முதலில் அமெரிக்காவில் அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு நடந்தால் குடியுரிமை பிரச்னை வரும் என்பதால் மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டு அதனையொட்டி கப்பலில் தனது குடும்பத்தினருடன் அங்கு சென்ற சூழலில்; ஜப்பானில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

பாரதிராஜாவின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நெப்போலியன். தொடர்ந்து ஹீரோ, வில்லன் என பல பாத்திரங்களில் நடித்த அவர் அரசியலிலும் தனது தடத்தை பதித்து இணை அமைச்சராகவும் இருந்தார். அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷுக்கு சிறு வயதிலேயே தசை சிதைவு நோய் வந்தது. முதலில் இந்தியாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்தி அளிக்காததால் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

dhanush napolean

அமெரிக்காவில் செட்டில்: மகனின் சிகிச்சையை முன்னிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டிலானார். அங்கு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியையும் தொடங்கி அதனை தனுஷின் பொறுப்பில் கொடுத்தார். தனுஷும் அதனை திறம்பட கையாண்டுவருகிறார். குறிப்பாக நெப்போலியனின் நிறுவனத்தில் தமிழர்கள் அதிகம் பணியாற்றிவருகிறார்கள். இதற்கிடையே நெப்போலியன் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து செல்கிறார். சினிமாவிலிருந்து ஏறத்தாழ முழுவதுமாக ஒதுங்கியும்விட்டார் அவர்.

மகனுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அக்‌ஷயா என்ற பெண்ணை பார்த்தார். தனுஷ் - அக்‌ஷயா நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. தனுஷால் விமானத்தில் பயணப்பட்டு இந்தியாவுக்கு வர முடியாது என்பதால் வீடியோ காலில் கலந்துகொண்டார் தனுஷ். அவரது திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சில சிக்கல்கள் வரும் என்பதால் ஜப்பானில் நடத்த திட்டமிட்டார்.

குவிந்த பிரபலங்கள்: அதனையடுத்து தனது குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கப்பலில் சென்றார். திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்த சூழலில் அத்திருமணத்தில் கலந்துகொள்வதற்காக குஷ்பூ, ராதிகா, மீனா, கலா மாஸ்டர், சரத்குமார், பாண்டியராஜன் என பல பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்தனர். திருமணத்துக்கு முன்பாக நலுங்கு, ஹல்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அப்போது நெப்போலியன் மற்றும் உறவினர்கள் மணமக்களுக்கு நலுங்கு வைத்தார்கள்.

திருமணம் ஓவர்: இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மணமக்கள் இருவரும் சிறப்பான உடையை அணிந்திருந்தனர். அக்‌ஷயா சந்தன நிற பட்டு சேலையும், தனுஷ் சிகப்பு நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தார். திருமண மேடையில் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி சுதா, அக்‌ஷயாவின் தந்தை, தாய் ஆகியோர் மணமக்கள் அருகே அமர்ந்து தேவையான சம்பிரதாயங்களை செய்தனர். மேலும் தாலியை தனுஷின் தாய் சுதா எடுத்துக்கொடுத்தார். தற்போது தனுஷ் - அக்‌ஷயா திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X