நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த அடுத்த சந்தோஷம்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தனுஷ்
சென்னை: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. ஜப்பானில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களும் கலந்துகொண்டார்கள். இன்னும் சில மாதங்களில் தனுஷுக்கும் அக்ஷயாவுக்கும் மீண்டும் அமெரிக்காவில் திருமணம் நடத்தப்படும் என நெப்போலியன் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் தனுஷ் போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பாரதிராஜாவின் கண்ணில் பட்டதை அடுத்து சினிமாவில் அறிமுகமானார் நெப்போலியன். தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருந்த அவர்; அரசியலிலும் தனது ஆளுமையை நிரூபித்து மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகனான தனுஷுக்கு தசை சிதைவு நோய் வந்திருப்பது பத்தாவது வயதில்தான் தெரிந்தது. எனவே முதலில் இந்தியாவில் வைத்து தனது மகனுக்கு சிகிச்சை அளித்தார் நெப்போலியன்.

அமெரிக்கா பயணம்: ஆனால் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அவருக்கு பெரிதாக பலன் அளிக்கவில்லை. இதன் காரணமாக தனது மகனின் உடல்நிலையை முன்னிட்டு சினிமா, அரசியல் என அனைத்தையும் துறந்துவிட்டு அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார். அங்கு தனுஷுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் அவருக்கு வசதியாக வீட்டையும் கட்டிக்கொடுத்தார். அதுமட்டுமின்றி மென்பொருள் நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார் நெப்போலியன்.
திருமணம்: சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அக்ஷயா என்ற பெண்ணை பார்த்தார்கள் நெப்போலியனும் அவரது மனைவியும். இதனையடுத்து இந்தியாவில் வைத்து நிச்சயதார்த்தம் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஜப்பானில் திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் நடந்தால் சில சட்ட சிக்கல்கள் வரும் என்பதால் ஜப்பானுக்கு திருமணம் மாற்றப்பட்டு அங்கு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் மீனா, சரத்குமார், ராஹிகா, கலா மாஸ்டர், குஷ்பூ என பலர் கலந்துகொண்டார்கள்.
மீண்டும் திருமணம்: மேலும் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்தினை வீடியோ மூலம் தெரிவித்துக்கொண்டார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாகவும்; அமெரிக்காவுக்கு வரும்போது கண்டிப்பாக நேரில் வந்து சந்திப்பதாக உறுதி கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே அமெரிக்காவில் மீண்டும் சில மாதங்கள் கழித்து தனது மகனுக்கும், மருமகளுக்கும் திருமணம் நடக்கும் என்று நெப்போலியனும் தெரிவித்திருக்கிறார்.
தனுஷ் வாழ்க்கையில் சந்தோஷம்: திருமணத்துக்கு பிறகு தனுஷும் அக்ஷயாவும் மகிழ்ச்சியோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். அதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டாகின. இந்நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். Pokeman 25ஆவது வருட விழாவையொட்டி உருவாக்கப்பட்ட ஜாக்கெட் எனக்கு கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். தனுஷுக்கு Pokeman மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து உங்களுக்கு பிடித்த விஷயங்கள் கிடைத்து மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











