ஜப்பானில் மகன் கல்யாணம்.. நெப்போலியன் பகிர்ந்த செம வீடியோ.. தனுஷ் பயங்கர மகிழ்ச்சி

சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷுக்கு அடுத்த மாதம் ஜப்பானில் திருமணம் நடக்கவிருக்கிறது. முதலில் அமெரிக்காவில் அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு நடந்தால் குடியுரிமை பிரச்னை வரும் என்பதால் மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டு அதனையொட்டி கப்பலில் தனது குடும்பத்தினருடன் அங்கு சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் நெப்போலியன் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாரதிராஜாவின் இயக்கத்தில் ஹீரோவாக ஆறிமுகமானவர் நெப்போலியன். தொடர்ந்து ஹீரோ, வில்லன் என பல பாத்திரங்களில் நடித்த அவர் அரசியலிலும் தனது தடத்தை பதித்து இணை அமைச்சராகவும் இருந்தார். அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷுக்கு சிறு வயதிலேயே தசை சிதைவு நோய் வந்தது. முதலில் இந்தியாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்தி அளிக்காததால் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

napolean dhanush tamil cinema

அமெரிக்காவில் செட்டில்: மகனின் சிகிச்சையை முன்னிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டிலானார். அங்கு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியையும் தொடங்கி அதனை தனுஷின் பொறுப்பில் கொடுத்தார். தனுஷும் அதனை திறம்பட கையாண்டுவருகிறார். குறிப்பாக நெப்போலியனின் நிறுவனத்தில் தமிழர்கள் அதிகம் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே நெப்போலியன் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து செல்கிறார். சினிமாவிலிருந்து ஏறத்தாழ முழுவதுமாக ஒதுங்கியும்விட்டார் அவர்.

மகனுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண் தனுஷை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. தனுஷால் விமானத்தில் பயணப்பட்டு இந்தியாவுக்கு வர முடியாது என்பதால் வீடியோ காலில் கலந்துகொண்டார் தனுஷ். அவரது திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சில சிக்கல்கள் வரும் என்பதால் ஜப்பானில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

நெப்போலியன் பகிர்ந்த வீடியோ: அதன்படி தனது குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து கப்பலில் ஜப்பானுக்கு பயணப்பட்டார் நெப்போலியன். சில வாரங்கள் கப்பல் பயணம் மூலம் அங்கு சென்று சேர்ந்திருக்கிறார். அடுத்த மாதம் தனுஷின் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில், அவரது மகன்களான தனுஷும், குணாலும் டோக்கியோவிலிருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரயிலில் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, இன்று தனுஷும், குணாலும் டோக்கியோ புல்லட் ரயிலில் ஒசாகாவுக்கு அவர்களது நண்பர்களோடு சென்றார்கள். அவர்கள் உண்மையில் கொண்டாட்டமாக உணர்ந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக தனுஷின் திருமணம் குறித்து ஒருதரப்பினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.

அந்த விமர்சனங்களுக்கு மௌனம் காத்து வந்த தனுஷ் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், " சில பேர் எனது திருமணம் பற்றி நெகட்டிவ்வாக பேசியிருந்தார்கள். நெகட்டிவ் பேச்சுக்கள் என்னை பெரிதாக எதுவும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது எனக்கு மோட்டிவேஷனாகத்தான் இருக்கிறது. அப்படி பேசியவர்களிடம் நான் ப்ரூவ் செய்து வென்று காட்டியே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். அதை ப்ரூஃப் பண்ணிட்டு உங்களிடம் வந்து பேசுகிறேன். என்னைப் போல் இருக்கும் நிறைய பேர் அதை செய்ய முடியாது இதை செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். அதெல்லாம் கேட்கவே கூடாது. விட்டுக்கொடுக்காமல் முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X