தனுஷ் மாதிரி இன்னொருவர் ஆகிடக்கூடாது.. நல்ல மனதோடு நெப்போலியன் செய்திருக்கும் சூப்பர் செயல்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கு கடந்த வருடம் அக்ஷயா என்கிற பெண்ணோடு திருமணம் நடந்தது. ஜப்பானில் பிரமாண்டமாக நடைபெற்ற அந்தத் திருமணத்தில் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை அதீத காதலோடு நகர்த்திவருகிறார்கள். இந்தச் சூழலில் நெப்போலியன் செய்திருக்கும் செயல் ஒன்று பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது.
பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நெப்போலியன். அவர் 90களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கியவர் . எந்தக் கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தனது நடிப்பில் பட்டையை கிளப்புபவர். ஹீரோ, வில்லன் மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கிய அவர் ஒருகட்டத்தில் நடிப்பிலிருந்து ஒதுங்கி அவ்வப்போது மட்டுமே நடித்துவந்தார். இதற்கிடையே அரசியலிலும் குதித்த அவர் மத்திய இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
மகனுக்காக அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன்: சூழல் இப்படி இருக்க அவருக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருந்தது. அப்படி ஒரு நோய் தன்னுடைய மகனுக்கு இருக்கிறது என்பது தனுஷின் பத்தாவது வயதில்தான் நெப்போலியனுக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சை சரிப்பட்டுவரவில்லை. எனவே தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார்.

அமெரிக்காவில் சிகிச்சை: அமெரிக்காவில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும் தனக்கு பிறகு மகனுக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைத்த நெப்போலியனும் அவரது மனைவியும் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து; அக்ஷயா என்கிற பெண்ணை பார்த்தார்கள். இரண்டு பேருக்கும் தமிழ்நாட்டில் முதலில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதில் தனுஷ் வீடியோ காலில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ஜப்பானில் வைத்து இருவருக்கும் திருமணத்தை முடிக்க முடிவு செய்தார்கள் குடும்பத்தினர்.
கோலாகல திருமணம்: அதன்படி கடந்த வருடம் தனுஷுக்கும், அக்ஷயாவுக்கும் இடையே ஜப்பானில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் தமிழ் சினிமாவிலிருந்து ராதிகா, குஷ்பூ, சரத்குமார், மீனா, கலா மாஸ்டர், பாண்டியராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளம் கலந்துகொண்டது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் தங்குவதற்கு உயர்தரத்தில் ஏற்பாடுகளை செய்து கலக்கியிருந்தார் நெப்போலியன். திருமணத்துக்கு பிறகு தனுஷும், அக்ஷயாவும் காதலோடு வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள்.
நெப்போலியன் கொடுத்த புகார்: ஆனால் ஒருதரப்பினரோ அக்ஷயாவின் வாழ்க்கையை தனுஷுக்காக நெப்போலியனும், அவரது மனைவியும் வீணடித்துவிட்டார்கள் என்று இஷ்டத்துக்கு பேசிவந்தார்கள். இதுகுறித்து நெப்போலியன் முதலில் பெரிதாக ரியாக்ட் எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒருகட்டத்தில் சிலர் எல்லை மீறி பேச தொடங்கினார்கள். இதனால் டென்ஷனான அவர்; உடனடியாக காவல் நிலையத்தில் புகாரையும் கொடுத்தார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் நெப்போலியன் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது தன்னுடைய மகன் போல் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு மையோபதி மருத்துவமனை ஒன்றை தொடங்கவிருக்கிறார். அதற்காக போடப்பட்ட பூஜை வீடியோவை அவரது நண்பர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே நெப்போலியன் ஒரு மருத்துவமனையை தொடங்கி இலவச சிகிச்சை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்போது இன்னொரு மருத்துவமனையை ஆரம்பிக்கவிருக்கும் அவரை பலரும் பாராட்டிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











