உங்க மூஞ்சில விஷம் சொட்டுது.. வெறுப்பா வருது.. எம்.எஸ்.பாஸ்கரை திட்டிய நெப்போலியன், சரத்குமார்

சென்னை: பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை சமீபத்தில் வென்றார் எம்.எஸ்.பாஸ்கர். மிகச்சிறந்த நடிகரான அவருக்கு இத்தனை வருடங்கள் கழித்தாவது விருது கிடைத்திருக்கிறதே என்று ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த விருது எம்.எஸ்.பாஸ்கருக்கு கண்டிப்பாக பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கும். இன்னும் வேகமாக ஓடக்கூடிய தெம்பை கொடுத்திருக்கும்.

திருமதி ஒரு வெகுமதி என்ற படம் 1987ஆம் ஆண்டு வெளியானது. அதில் சிறிய ரோலில் நடித்து திரைத்துறயில் தலை காண்பித்தவர் எம்.எஸ்.பாஸ்கர். பிறகு மக்கள் என் பக்கம், காவலன் அவன் கோவலன், அண்ணனுக்கு ஜெய், சேலம் விஷ்ணு என ஏகப்பட்ட படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தவருக்கு; எப்படியாவது மிகப்பெரிய நடிகராக வந்துவிட வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருந்தது.

சீரியலில் கலக்கிய பாஸ்கர்: சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பினார் அவர். அந்தவகையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற சீரியலில் பட்டாபி கேரக்டரில் நடித்து தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆனார். அந்த சீரியலின் வெற்றி அவருக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகளை பெற்று கொடுத்தது. அதன்படி செல்வி சீரியலில் வில்லன் ரோலை ஏற்று கலக்கியிருந்தார். இடையே சினிமாவிலிம் அவ்வப்போது தலைகாட்டி வந்த அவருக்கு டும் டும் டும் திரைப்படம் பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

Napoleon and Sarathkumar scolds National Award winner M S Bhaskar for Selvi Serial
Photo Credit:

மிகச்சிறந்த நடிகர்: அப்படத்துக்கு பிறகு பிஸியான நடிகராக மாறிவிட்டார் பாஸ்கர். நகைச்சுவை கேரக்டர், குணசித்திர வேடங்கள் என எதை கொடுத்தாலும் அசால்ட்டாக நடித்து பெயர் வாங்கக்கூடியவராக விளங்குகிறார். தனது நடிப்பில் எதார்த்தம், வேரியேஷன் என கலந்துகட்டி கொடுக்கும் அவர்; எந்த வட்டார வழக்கையும் மிக எளிதாக பேசிவிடக்கூடியவர். இப்படிப்பட்ட ஒரு மகா நடிகனுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்காமல் இருக்கிறதே என ரசிகர்களே நொந்துகொண்டார்கள்.

தேசிய விருது: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து இப்போதாவது விருது கிடைத்திருக்கிறதே என்று பலரும் மகிழ்ச்சியடைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாஸ்கரின் பேட்டி: அவர் India Glitz யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "செல்வி சீரியலில் நான் ஆண்டவர் லிங்கம் கேரக்டரை ஏற்றிருந்தேன். அந்த வில்லன் கதாபாத்திரத்தில் எனது நடிப்பை பார்த்த என்னுடைய அம்மா எனக்கு சாப்பாடு போடமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதேபோல் என்னுடைய மகளின் டீச்சர் என்னை அழைத்து நல்ல கேரக்டரை ஏற்று நடிக்கலாமே என்று கூறினார். இதையெல்லாம் தாண்டி ஒன்று நடந்தது.

வெறுத்த நடிகர்கள்: அதாவது ஒருமுறை அந்த சீரியல் சமயத்தில் நெப்போலியனையும், சரத்குமாரையும் சந்தித்தேன். அப்போது அவர்கள் இரண்டு பேருமே, 'போங்க பாஸ்கர். உங்களை நாங்கள் பட்டாபி கேரக்டரில் எப்படி கொண்டாடினோம். ரசித்தோம். இந்த ஆண்டவர் லிங்கம் கேரக்டரை பார்க்கவே வெறுப்பாக வருகிறது. உங்கள் முகத்தில் விஷம் சொட்டுகிறது. இப்படியெல்லாம் உங்களை யார் நடிக்க சொன்னது என கேட்டார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X