அப்பா, அம்மாவை கட்டிப்பிடித்து கதறி அழுத நெப்போலியனின் மருமகள்.. பாவம்பா அந்த பொண்ணு!
சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஜப்பானில் தடபுடலாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பங்கேற்க சரத்குமார், ராதிகா, குஷ்பு, மீனா, கார்த்திக், பாண்டியராஜன், விதார்த், சுஹாசினி அனைவரும் ஜப்பான் சென்று மணமக்களை வாழ்த்தினர். அப்பா,அம்மாவை கட்டிப்பிடித்து கதறி அழுத வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதைப்பார்த்த இணையவாசிகள் பாவம்பா அந்த பொண்ணு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர் என பலவிதமான ரோலில் நடித்து இருக்கிறார். சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த நொப்போலியன், திமுகவில் இணைந் 2001 சட்டமன்றத்திற்கும் ,2009 நாடாளுமன்றத்திற்கும் தேர்வு செய்யப்பட்டார். மத்திய சமூக நீதி இணை அமைச்சராகவும் நெப்போலியன் பொறுப்பு வகித்தார். மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்ற நெப்போலியன் குடும்பத்துடன் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

ஜப்பானில் திருமணம்: அதையடுத்து,கடந்த 7ந் தேதி தனுஷுக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் ஜப்பானில் வெகு விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது. ஜப்பானே திக்கு முக்காடும் வகையில் தமிழ் பாரம்பரிய முறைப்படி மிகவும் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. நெப்போலியனின் மகன் தனுஷ், ஜப்பானில் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டதால் திருமணத்திற்காக பல கோடிகளை செலவு செய்து திருமணத்தை நடத்தி உள்ளார் நெப்போலியன்.
எதற்கு இந்த திருமணம்: தனுஷுக்கு திருமணம் தேவையா, ஒரு பெண்ணின் வாழ்க்கையே வீணா போச்சு, அக்ஷயா பணத்திற்காக திருமணம் செய்து கொண்டார் என பலவிமர்சனங்கள் எழுந்த நிலையில், யூடியூபிற்கு பேட்டி அளித்த அக்ஷயாவின் பெற்றோர். நெப்போலியனின் மனைவி ஜெயசுதாவின் அப்பாவின் வீட்டுக்கு பக்கத்தில்தான் நாங்கள் வசித்தோம். அதனால் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நெப்போலியன் குடும்பத்தை நன்றாக தெரியும். அவர்கள் எங்களுடைய வீட்டில் வந்து பெண் கேட்டபோது நான் முதலில் தயங்கினேன். ஆனால், அக்ஷயா, நெப்போலியன் சார் குடும்பத்தை பற்றி எனக்கு தெரியும், நான் தனுசை திருமணம் செய்து கொள்கிறேன் என்று, அதன் பிறகு அனைவரும் பேசி முடிவெடுத்து தான் இந்த திருமணம் நடைபெற்றது என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
பாவம்பா இந்த பொண்ணு: இந்நிலையில் தற்போது, அக்ஷயா, அம்மா, அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுத வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. நெப்போலியன் குடும்பத்தினர் ஜப்பானில் இருந்து அப்படியோ டூருக்கு கிளம்புகின்றனர். இதனால், அக்ஷயாவின் குடும்பத்தினர் இந்தியா திரும்ப உள்ளதால், அக்ஷயா அவர்களின் பிரிவை நினைத்து கதறி அழுதார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் இந்த பொண்ணு உண்மையிலேயே பாவம்பா, எல்லாப் பெண்களுக்கும் அம்மாவை பிரியும் போது மனதில் சொல்லமுடியாது வலி இருக்கும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











