இப்படியும் மனிதர்கள் இருக்காங்க.. தனுசைப்பத்தி மோசமா பேசுன டாக்டர்.. நொந்துபோன நெப்போலியன்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் ஜப்பானில் கடந்த 7ந் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில், குஷ்பு, ராதிகா,சரத்குமார்,மீனா, கலா மாஸ்டர் என பலர் கலந்து கொண்டனர். ஜப்பானே திகைத்துப்போகும் அளவிற்கு நெப்போலியன் தனது மகனுக்கு திருமணத்தை நடத்திவைத்துவிட்டு அழகு பார்த்துள்ளார். இதுகுறித்து பல சுவாரசியமான விஷயங்களை பேசி வரும் நெப்போலியன், தன் மகன் தனுஷ் குறித்து மோசமான கருத்து கூறிய டாக்டர் குறித்து பேசி உள்ளார்.
நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருக்கிறார். இந்தியாவில் பல சிகிச்சைகளை செய்த நெப்போலியன் அதில் பலன் அளிக்காததால், அமெரிக்கா சென்றார்.பின் மகனுக்காக சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டு விட்டு அங்கேயே செட்டிலாகி விட்டார்.

தனுஷ்,அக்ஷயா திருமணம்: இதையடுத்து, நெப்போலியனுக்கு கடந்த ஜூன் மாதம் திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்பவருடன் நிச்சயம் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து மகன் தனுஷ் ஆசைப்பட்டதால் ஜப்பானில் தமிழ் முறைப்படி மிகவும் தடபுடலாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமானவர்கள் கலந்து கொண்டனர். அதே போல ஜப்பானில் சவுத் இந்திய உணவு பரிமாறப்பட்டு அனைவரையும் திக்கு முக்காடவைத்துவிட்டார்.
நெப்போலியன் வேதனை: தனுஷூக்கு நடந்த இந்த திருமணம் குறித்து இணையத்தில் ஒரு பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு பேசப்பட்டு வருகிறது. தனுஷூக்கு இந்த திருமணம் தேவையா என்றும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்கள் என்றும், தனுஷால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாது என்றும் பலவிதமான மோசமான கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகிறது
இதுகுறித்து பேசிய நெப்போலியன், என்னுடைய மகன் திருமணம் குறித்து ஒரு டாக்டர் மிகவும் மோசமாக கொச்சையாக பேசி வருகிறார். அதை கேட்கும் போது மனம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பொதுவாக நான் செய்யும் உதவிகளை வெளியே சொல்ல மாட்டேன். நான் செய்யும் உதவி அதிகபட்சம் என் மனைவிக்கும் மட்டுமே தெரியும். ஆனால், தற்போது அந்த விஷயத்தை சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு வந்து இருக்கிறேன்.
படுமோசமான விமர்சனம்: "என் உயிர் தோழன்" பாபு என ஒரு நடிகர் இருந்தார். அவர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த அதன் பிறகு தவறான சிகிச்சை முறைகளால் மோசமான உடல்நிலைக்கு சென்று விட்டார். எழுந்து நடக்க முடியாமல் பல ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு உதவி செய்யும் படி பொன்வண்ணன் என்னிடம் கேட்டார், அதன் பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மாத மாதம் அவருக்கு பணம் அனுப்பி உதவி செய்தேன். அந்த நடிகர் யார் என்றால் என்னுடைய மகனை பற்றி படுமோசமாக பேசும் அந்த டாக்டரின் உறவினர்.
வேதனையாக உள்ளது: தன்னுடைய உறவினர ஒருவர் இப்படி மோசமான சூழ்நிலையில் இருக்கிறார் அவருடைய உடல் நலனில் அக்கறை செலுத்தாத நீங்கள். அவர் அவரைப் பற்றி கவலைப்படாத நீங்கள். இன்று என்னுடைய மகனைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்? இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது என்று பேசிஇருந்தார். அந்த மருத்துவர் வேறு யாரும் இல்லை,தனுஷ் குழந்தை பெற்றக்கொள்ள தகுதி இல்லாதவர் என்று விமர்சித்த டாக்டர் காந்தராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











