பொண்ணு பார்த்தது நான் தான்.. தனுசை பத்தி தப்பு தப்பா சொன்னாங்க.. கண்கலங்கிய நெப்போலியன் மாமனார்!

சென்னை: நெப்போலியன் மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்கிற பெண்ணுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் ஜப்பானே திகைத்து போகும் அளவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. தற்போது தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் இன்று ஜப்பானை சுற்றிப்பார்த்த போட்டோவும் டிரெண்டாகி வருகிறது.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குஷ்பு, மீனா,கலா மாஸ்டர்,சரத்குமார், ராதிகா, சுஹசினி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரையும் பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்துள்ளார் நடிகர் நெப்போலியன். அதுமட்டுமில்லாமல் ஜப்பானில் மிகவும் பிரசித்தி பெற்ற சவுத் இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த திருமணத் திருவிழா வரும் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பிறகு தான் இவர்கள் மீண்டும் கப்பலில் பயணம் செய்து மீண்டும் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்.

nepoleon dhanush akshaya

நாங்க தான் பெண் பார்த்தோம்: இந்நிலையில், பேரன் தனுஷின் திருமணத்தை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கும் நெப்போலியனின் மாமியார் மற்றும் மாமனார் திருமணம் குறித்து பேட்டி அளித்துள்ளனர். அதில், திருச்சியை அடுத்த வயலூரில் இருந்தோம், அப்போ அக்ஷயாவின் குடும்பம் அங்கு15 வருடமாக இருந்தார்கள். அதன் பிறகு தான் அவர்கள் சொந்த ஊருக்கு போய்விட்டார்கள். எனக்கு அக்ஷயாவை சிறு வயதில் இருந்தே பிடிக்கும், நல்ல படிப்பாள். இதனால் நான் தான் முதலில் பெண் கேட்டேன், அவர்களும் சம்மதித்துவிட்டார்கள். இந்த விஷயத்தை மாப்பிள்ளையிடம் சென்னேன் அவருக்கு என் மேல் சந்தேகம்.எதையாவது சொல்லி ஏமாத்தி இருக்கக்போகிறான் என்று, நொப்போலியனின் சகோதரை அனுப்பி பேச சொன்னார். அப்போது அக்ஷ்யா, யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை, நான் மனப்பூர்வமாகத்தான் திருமணத்திற்கு சம்மதிக்கிறேன் எனறு சொன்ன பிறகு தான் திருமணத்திற்கான ஏற்பாடே நடந்தது.

தப்பு தப்பா பேசுனாங்க: இப்போது திருமணம் நடந்து இருப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, நிச்சயம் ஆனதும்,தனுஷ் பற்றி தப்பு தப்பா மனசே கஷ்டப்படும் அளவிற்கு பல செய்திகள் வந்தது. அதை எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு கடவுளே நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம் இதுநடந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.என் மாப்பிள்ளை மனசுப்படி நல்ல மருமகள் கிடைத்து இருக்கிறாள்.என் மருமகன் தங்கமான குணம் கொண்டவர்.அவர் என்னை மாமியார் போல நினைத்ததே இல்லை, என்னை அவரின் அம்மாவாகத்தான் நினைப்பார். அதே போல, மருமகன் நெப்போலியனின் அம்மா, அப்பா இல்லை இறந்துவிட்டார்கள். அவர்களுக்காகவே சொந்த ஊரில் இருவருக்கும் சிலைவைத்து இருக்கிறார். எப்போது எல்லாம் இந்தியா வருகிறார்களோ அப்போது எல்லாம், அந்த இடத்திற்கு சென்றுவிட்டுத்தான் மற்ற இடத்திற்கு செல்வார் என்று நெப்போலியனின் மாமனார் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X