Napoleon: "பஞ்சு மிட்டாய் சீல கட்டி..” நெப்போலியனுக்காக அமெரிக்கா பறந்த குஷ்பூ, மீனா!!
சென்னை: நடிகர் நெப்போலியன் சில தினங்களுக்கு முன்னர் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெற்ற நெப்போலியன் பிறந்தநாள் விழாவில் குஷ்பூ, மீனா கலந்துகொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

நெப்போலியனுடன் குஷ்பூ, மீனா
புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெப்போலியன். ஹீரோ, வில்லன் என பல படங்களில் நடித்துள்ள நெப்போலியன், தமிழ் சினிமாவின் தவிக்க முடியாத நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எஜமான், கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, விருமாண்டி, போக்கிரி போன்ற படங்களில் நெப்போலியனின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர்.
நடிப்பில் மட்டுமில்லாமல் அரசியல், பிஸினஸ் என இன்னொரு பக்கமும் நெப்போலியன் ரொம்பவே பிஸியாக வலம் வந்தார். ஆனால், தற்போது சாஃப்ட்வேர் பிஸினஸில் அதிக கவனம் செலுத்தி வரும் நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவின் நாஷ்வில்லி டென்னசி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நெப்போலியன் தனது 60வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். கடந்த 2ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நெப்போலியனுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் நாஷ்வில்லி டென்னசியில் நடிகர் நெப்போலியனின் தனது 60வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இதில் அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
நெப்போலியனின் பிறந்தநாள் விழாவுக்காக சென்னையில் இருந்து நடிகைகள் மீனாவும் குஷ்பூம் அமெரிக்கா சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் நெப்போலியன் உடன் எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது. எஜமான் படத்தில் மீனாவுடன் இணைந்து நடித்துள்ளார் நெப்போலியன். சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் நெப்போலியன் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நெப்போலியன் - குஷ்பூ ஜோடி எட்டுப்பட்டி ராசா படத்தில் இணைந்து நடித்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பஞ்சு மிட்டாய் சீல கட்டி' பாடல் ரொம்பவே பிரபலமானது. இதே பாடலை சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் ரீமிக்ஸ் செய்திருந்தனர். நெப்போலியன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் கார்த்தியின் சுல்தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











