முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்த விக்கெட்டுகள்.. நெப்போலியன் பகிர்ந்த மலரும் நினைவுகள்.. வாவ் செம சூப்பர்!
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். அவருக்கு பிறந்த இரண்டு மகன்களில்; மூத்த மகனான தனுஷுக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோயின் காரணமாக; சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். கடந்த வருடம்தான் தனுஷுக்கும், அக்ஷயா என்பவருக்கும் ஜப்பானில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நெப்போலியனின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நெப்போலியன் ஹீரோ, வில்லன் என இரண்டு ரோல்களையும் செய்தவர். எந்த கேரக்டராக இருந்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யக்கூடிய அவர்; அரசியலிலும் தடம் பதித்து ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்தார். அவருக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பது அவருடைய பத்தாவது வயதில் கண்டறியப்பட்டது.

அமெரிக்காவில் செட்டில்: ஆரம்பத்தில் அவருக்கு இந்தியாவில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்தி அளிக்காததால்; அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு சென்று செட்டிலாகிவிட்டார். மேலும் அக்ஷயா என்ற பெண்ணை பார்த்து தனது மகனுக்கு கடந்த வருடத்தில் ஜப்பானில் திருமணமும் செய்துவைத்தார். அந்தத் திருமணத்தை பற்றி ஒருதரப்பினர் தொடர்ந்து அவதூறாக பேசிவந்தார்கள். ஆனால் அதை காதில் ஏற்றிக்கொள்ளாத தனுஷும், அக்ஷயாவும் திருமணம் செய்துகொண்டு இப்போது ஹேப்பியாக வாழ்ந்துவருகிறார்கள்.
நெப்போலியனின் போஸ்ட்: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார். அப்போது கிரிக்கெட் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்திய அவர், '25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் சிம்பு, நெப்போலியன் உட்பட மொத்தம் மூன்று விக்கெட்டுகளை எடுத்தேன்' என்று நினைவுகூர்ந்தார். இந்நிலையில் அதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் நெப்போலியன்.
ட்ரெண்டாகும் வீடியோ: அவர் வீடியோவுடன் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட்டில், "உலகெங்கும் வாழும் அன்பு நண்பர்களே, நமது தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்...! இந்தியாவில் சென்னையில் கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் , அன்றைய சென்னை மேயர், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வர் மாண்புமிகு அண்ணன் தளபதி அவர்களும், அவர்களோடு அனைத்து நடிகர்களும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவர்கள் கபில்தேவ், ஶ்ரீகாந்த், மற்றும் டிராவிட் , உள்ளிட்ட அனைத்து பிரபலமான விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்ட அந்த விளையாட்டுப் போட்டியினைப் பற்றி நமது முதல்வர் அவர்கள் இன்றும் மறக்காமல் , சமீபத்தில் விளையாட்டு வீரர்களோடு கலந்து கொண்ட நேர்காணலில் சொன்ன காணொலி தற்போது சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது...! அந்த காணொலி இதோ உங்கள் பார்வைக்கு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











