நெப்போலியன் மருமகளின் புத்தாண்டு கொண்டாட்டம்.. செம ஹேப்பியா இருக்காங்க.. சுத்தி போடுங்க
சென்னை: நெப்போலியன் மகன் தனுஷுக்கும், அக்ஷயாவுக்கும் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜப்பானில் நடந்த கோலாகல திருமண விழாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்களான மீனா, சரத்குமார், கலா மாஸ்டர் என பலர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது அவர்களது வாழ்க்கை. இந்நிலையில் 2026 புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறார் அக்ஷயா.
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடம் கம்ப்ளீட் நடிகராக இருந்தவர் நெப்போலியன். பாரதிராஜாவின் அறிமுகம் என்றாலே அவருக்கு திறமை கொட்டி கிடக்கும் என்பது நெப்போலியனும் சாட்சி. எந்த கேரக்டரை கொடுத்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர்; அரசியலிலும் தனது தடத்தை பதித்தவர். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால்; சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
மகனுக்கு திருமணம்: அமெரிக்காவில் தனது மகனுக்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்திருக்கிறார். ஒரு தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார். தன்னுடைய காலத்துக்கு பிறகு மகனுக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும் என்பதால் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷயா என்பவரை பார்த்து கடந்த 2024ஆம் ஆண்டு ஜப்பானில் திருமணம் செய்துவைத்தார். இப்போது தனுஷ் தனது மனைவி அக்ஷயாவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

தேவையில்லாத பேச்சுக்கள்: தனுஷ் - அக்ஷயா திருமணம் அறிவிக்கப்பட்டபோது ஏகப்பட்ட பேர் தேவையில்லாத பேச்சுக்களை பேசினார்கள். தனுஷுக்கு திருமணம் செய்துவைத்து அக்ஷயாவின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்கள் என்றெல்லாம் வாய்க்கு வந்ததை பேசினார்கள். ஆனால் இந்தத் திருமணத்தில் அக்ஷயாவுக்கு முழு சம்மதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவதூறாக பேசியவர்களை எல்லாம் தங்களது வாழ்க்கை மூலம் வாயடைக்க வைத்திருக்கிறார்கள் தனுஷும், அக்ஷயாவும்.
மகள் மாதிரி: நெப்போலியனையும், அவரது மனைவியையும் பொறுத்தவரை தங்கள் மருமகளை மகளாகவே பார்த்துவருகிறார்கள். கடந்த வருடத்தில்கூட இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு திரும்பிய மருமகளை விமான நிலையத்திலும், வீட்டிலும் சிறப்பாக வரவேற்றார் நெப்போலியன். அந்த வீடியோ அப்போது சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தனது சொத்துக்களில் பெரும்பாலானவையை அக்ஷயா பொறுப்பிலும் விட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டம்: அக்ஷயாவும் தனது கணவருக்கு வேண்டிய அனைத்தையும் காதலோடு செய்துவருகிறார். இந்நிலையில் 2026ஆம் ஆண்டை புத்தாண்டை தனது மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டோருடன் அமெரிக்காவில் கொண்டாடியிருக்கிறார் அவர். குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து 2026 புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்திருக்கிறார் நெப்போலியன். அவர்களுக்கு ரசிகர்களும் தங்களது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











