நெப்போலியன் மகன் பிறந்தநாள்.. அக்ஷயா எவ்வளவு காதல் வெச்சிருக்காங்க பாருங்க.. குடும்பம் உச்சக்கட்ட சந்தோஷம்
சென்னை: நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கு கடந்த வருடம் அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ்ந்துவருகிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் அவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை நெப்போலியன் பகிர்ந்திருக்கிறார்.
பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நெப்போலியன் அரசியல்வாதியாகவும் தனது பயணத்தை தொடர்ந்தவர். தனது இரண்டு மகன்களில் மூத்த மகனான தனுஷுக்கு தசை சிதைவு நோய் வந்ததன் காரணமாக சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டாஅர். அங்கு தன் மகனுக்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுத்திருக்கிறார்.
திருமணம் செய்துகொண்ட தனுஷ்: தங்களுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அக்ஷயா என்ற பெண்ணை பேசி முடித்தார்கள் நெப்போலியனும் அவரது மனைவியும். தனுஷின் உடல்நிலை மற்றும் இதர விஷயங்களை தெளிவாக கூறியதை அடுத்து; அக்ஷயாவும் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜப்பானில் வைத்து பிரமாண்டமாக அவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

காதலோடு வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை அவ்வளவு அழகாக வாழ்ந்துவருகிறார்கள். இருப்பினும் ஒருதரப்பினர் இந்தத் திருமணம் தேவையில்லாத ஒன்று என வழக்கம்போல் அவதூறாகவும், தங்களது இஷ்டத்துக்கும் பேசினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த நெப்போலியன் தரப்பு காவல் நிலையத்தில் புகாரும் அளித்தது. அதனையடுத்துதான் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.
வரவேற்ற நெப்போலியன்: நெப்போலியனை பொறுத்தவரை தனது மருமகளை தங்க தட்டில் வைத்து தாங்காத குறைதான். சமீபத்தில்தான் அமெரிக்காவில் இருக்கும் வீட்டுக்கு அக்ஷயா வந்தார். அப்போது பூக்கள் தூவி அவர் வரவேற்கப்பட்டார். அந்த வீடியோ பயங்கரமாக ட்ரெண்டானது. முக்கியாமக நெப்போலியன் சிறந்த தந்தை மட்டுமில்லை மிகச்சிறந்த மாமனாராகவும் இருக்கிறார் என பலரும் புகழ்ந்து பாரட்டினார்கள்.
தனுஷின் பிறந்தநாள்: இந்நிலையில் தனுஷ் தனது 27ஆவது பிறந்தநாளை கடந்த ஜூலை 27ஆம் தேதி கொண்டாடியிருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் அவரது வீட்டில் கேக் வெட்டி இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த கொண்டாட்டத்தில் அக்ஷயா உள்ளிட்ட குடும்பத்தினர்; நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டார்கள். அந்த பிறந்தநாள் செலிபிரேஷனில் உச்சபட்ச காதலோடு தனுஷுக்கு அக்ஷயா கேக்கை ஊட்டிவிடுகிறார்.
நெப்போலியன் பதிவு: இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நெப்போலியன், "அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, உங்களது அன்பாலும், ஆசீர்வாதத்தாலும், தனுஷுடைய 27வது பிறந்தநாளை , அதாவது தனுஷுடைய Golden Birthday வை அக்ஷயாவுடனும், எங்கள் நேஷ்வில் குடும்ப நண்பர்களுடனும் சேர்ந்து நாங்கள் மகிழ்ச்சியாக July 27லி்ல் எங்கள் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினோம்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











