நெப்போலியன் வீட்டில் விசேஷம்.. மூன்று மாதங்களில் இப்படி.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தனுஷும், குடும்பமும்
சென்னை: நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. எனவே சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் கடந்த வருடம் நெப்போலியனின் மகனுக்கும், அக்ஷயா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள் இரண்டு பேரும்.
கோலிவுட்டின் மூத்த மற்றும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளை அவரும் சரியாக பயன்படுத்தி படிப்படியாக முன்னேறினார். கதாநாயகன் மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து அசத்திய அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் பத்து வயதில் கண்டறியப்பட்டது.

அமெரிக்காவில் செட்டில்: இதற்கிடையே அரசியலிலும் காலடி வைத்த நெப்போலியன் மத்திய இணையமைச்சராக பதவி வகித்தார். சூழல் இப்படி இருக்க தனது மகனுக்கான சிகிச்சை இந்தியாவைவிட அமெரிக்காவில் சிறப்பாக கிடைக்கும் என்பதால்; குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்தும்; மென்பொருள் நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தியும் வருகிறார் நெப்போலியன்.
மகனின் திருமண ஏற்பாடு: அந்த மென்பொருள் நிறுவனத்தில்தான் மகன் தனுஷ் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் நெப்போலியன். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை நெப்போலியனும், அவரது மனைவியும் பார்த்தார்கள். தமிழ்நாட்டில் வைத்து சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் முடிந்தது. தனுஷ் வீடியோ காலில் அந்த நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார்.
ஜப்பானில் திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து இருவருக்குமான திருமணம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜப்பானில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் குஷ்பூ, மீனா, கலா மாஸ்டர், ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். திருமணத்தில் நடந்த நடனம் தொடர்பான நிகழ்வுகளை கலா மாஸ்டர்தான் கவனித்திருந்தார். திருமணத்துக்கு பிறகு தனுஷும், அக்ஷயாவும் உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள்.
வீட்டில் விசேஷம்: இந்நிலையில் நெப்போலியன் வீட்டில் விசேஷம் நடந்திருக்கிறது. அதாவது திருமணம் முடிந்த கையோடு சில நாடுகளுக்கு சென்ற நெப்போலியன் குடும்பம் தற்போது மலேசியாவில் இருக்கிறது. நெப்போலியன் அவரது மகன்கள், மருமகள், மனைவி என அனைவரும் அங்கேதான் தற்போது இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தனுஷ் - அக்ஷயா தம்பதியின் திருமண ரிசப்ஷனை மலேசியாவின் இரட்டை கோபுரத்தில் வைத்து பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார் நெப்போலியன். அதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. வீடியோவில் தனுஷும் அக்ஷாயவும் நிரம்பிய மகிழ்ச்சியோடு காணப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











