நெப்போலியன் மகன் திருமணம் இந்த தேதியில் நடக்கிறதா?.. காத்து வந்த ரகசியம் கசிந்து விட்டதா?
சென்னை: சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம் பற்றிய செய்தியைத்தான் பார்க்க முடிகிறது. அவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், பலரும் அவரின் திருமணம் குறித்து பேசி வருகின்றனர். இப்படி இவரின், திருமண செய்தி வைரலாகி இருக்கும் நிலையில் திருமணம் எப்போது என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது.
நடிகர் நெப்போலியன் ஹீரோவாக அறிமுகமாகி பின் வில்லனாக பல திரைப்படத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் இவர் இணைந்து நடித்த எஜமான் படத்தில் இவரின் கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. அதே போல, கிழக்குசீமையிலே படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த நெப்போலியன் பின் திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ, எம்பி, மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

நெப்போலியன் மகன் திருமணம்: இவரின் மூத்த மகன் தனுஷ், பிறந்த போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு நான்கு வயது இருக்கும் போது, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, தனது பத்தாவது வயதில் நடக்க முடியாத நிலைக்கு சென்றார். இதற்காக திருநெல்வேலியில் இயற்கை முறையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அது பலன் அளிக்காமல் போனது. இதையடுத்து, மகனுக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க சென்ற நெப்போலியன் குடும்பத்தோடு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
நிச்சயதார்த்தம்: நெப்போலியன் தனது மகனுக்கு திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடைபெற்றது. தனுஷ் இந்தியா வரமுடியாததால், அவர்களின் திருமணம் வீடியோ காலில் நடைபெற்றது. சோஷியல் மீடியாவில் தனுஷுக்கு திருமணம் செய்வது தவறு என்றும், அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாது என்று பலவிதமான பேச்சுக்கள் பரவி வருகின்றன.
திருமண பத்திரிக்கை: இப்படி நெப்போலியன் மகனின் திருமணம் குறித்து விவாதம் எழுந்து வந்தாலும், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது மகனின் திருமணத்திற்கான பத்திரிக்கை கொடுக்கும் பணியில் மும்முரமாக உள்ளார் நெப்போலியன். முன்னதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். அடுத்ததாக, யூ டியூபர் இர்பான் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று அழைப்பிதழ் கொடுத்தார். அந்த பத்திரிக்கையோடு வெள்ளிக்கிண்ணம் ஒன்றையும், நட்ஸ் பாக்ஸ் ஒன்றையும் பரிசாக கொடுத்து இருந்தார்.
திருமண தேதி: நெப்போலியன் மகனின் திருமணம், ஜப்பானில் நடைபெறும் சொகுசு கப்பலில் நடைபெறும் என செய்தி பரவிய நிலையில் திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க இருப்பதாக இர்பான் தான் கூறியிருந்தார். ஆனால், திருமணம் எந்த தேதியில் நடக்கிறது, வரவேற்பு எப்போது என்கிற எந்த விவரமும் தெரியவில்லை. திருமண தேதி வெளியில் கசிந்துவிடாமல் மிகவும் கவனமாக இருக்கிறார் நெப்போலியன். ஆனால், தற்போது திருமண தேதி குறித்த தகவல் காற்றுவாக்கில் வந்துள்ளது. அதாவது தற்போது அடி மாதம் பிறந்து உள்ளதால், ஆவணி மாதம் அதாவது அடுத்த மாதம் மூன்றாம் வாரத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











