Year Ender 2024: அதிக ஆதரவு, விமர்சனங்களை சந்தித்த நெப்போலியன் மகன் திருமணம்

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். அவருக்கு இருக்கும் இரண்டு மகன்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவருக்கும் அக்‌ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த வருடத்தில் அதிக ஆதரவுகளையும், விமர்சனங்களையும் சந்தித்த திருமணங்களில் இந்தத் திருமணம் ஒன்று. 2024ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் தனுஷ் திருமணம் குறித்து ஒரு ரீவைண்ட் செய்யலாம்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானவர் நெப்போலியன். அதன் பிறகு வில்லன், ஹீரோ என கலந்துகட்டி நடித்தார். தனக்கு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிக சிறப்பாக செய்யக்கூடியவர் அவர். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்த அவர் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது.

year ender 2024 napoleon dhanush

அமெரிக்கா பயணம்: எனவே தனுஷின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்று செட்டில் ஆன நெப்போலியன்; அங்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். மேலும் ஏக்கர் கணக்கில் விவசாயமும் செய்கிறார். சூழல் இப்படி இருக்க தனக்கு பிறகு தனது மகனுக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரும், அவரது மனைவியும் முடிவு செய்தார்கள். அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை தேர்ந்தெடுத்தார்கள்.

ஜப்பானில் கல்யாணம்: அக்‌ஷாயவும் இந்தத் திருமணத்துக்கு முழு மனதோடு ஒத்துக்கொண்டதால் இவர்களின் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மீனா, சரத்குமார், ராதிகா, பாண்டியராஜன் என நட்சத்திர பட்டாளம் கலந்துகொண்டது. மேலும் சிவகார்த்திகேயன் வீடியோ காலிலும், ரஜினிகாந்த் ஃபோன் காலிலும் தம்பதிக்கு வாழ்த்து சொன்னார்கள். இப்போது தனுஷும் அக்‌ஷயாவும் மகிழ்ச்சியோடு தங்கள் நாட்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் திருமணத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேரத்தான் வந்தது.

ஆதரவு: நெப்போலியன் ஒரு தந்தையாக தனது மகனுக்கு இந்தத் திருமணத்தை செய்து வைக்கிறார். இதில் மற்றவர்களுக்கு என்ன வந்தது என்று பலரும் அவருக்கும், தனுஷுக்கும் ஆதரவு தெரிவித்தார்கள். அதேபோல் நெப்போலியன் மகன் திருமணத்தை இவ்வளவு எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் பேச்சுக்கள் எழுந்தன. திருமணத்தில் கலந்துகொண்ட செலிபிரிட்டிகளோ நெப்போலியன் செய்திருக்கும் செயலை பார்க்கையில் தங்களுக்கு ரொம்பவே நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் எதிர்க்க வேண்டிய விஷயம் ஒன்றுமே இல்லை என்று ஆதரவு குரல்களை எழுப்பினார்கள்.

எதிர்ப்பு: அதேசமயம் தனுஷ் திருமணத்தை எதிர்த்தவர்களோ, 'நெப்போலியனுக்கு ஒரு மகள் இருந்தால் அவர் தனுஷ் போன்ற பையனுக்கு திருமணம் செய்து வைப்பாரா. அக்‌ஷயாவின் வாழ்க்கையை நெப்போலியனும், அவரது மனைவியும் சீரழித்துவிட்டார்கள். தனுஷுக்கு ஒரு செவிலியராகத்தான் அக்‌ஷயா இருப்பார்’ என்றெல்லாம் பேசினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த நெப்போலியன் யாரும் இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று உருக்கமான வேண்டுகோள் வைத்தார். தனுஷோ ஒரு வீடியோவில், எனது திருமணத்துக்கு ஆதரவும் வருகிறது எதிர்ப்பும் வருகிறது. என்னால் எதையும் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். நிச்சயம் இவர்களுக்கு முன்பு நான் எனது திருமண வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து காட்டுவேன்’ என்று பதிலடி கொடுத்தார். இப்படி எதிர்ப்போடும், ஆதரவோடும் இந்த வருடத்தில் தனுஷின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X