மெரினாவில் கலைஞர்! இருவர் பட வசனத்தை மேற்கோள் காட்டிய நரகாசூரன் இயக்குனர்!
இருவர் பட வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன்.
Recommended Video

ட்விட்டரில் கருணாநிதிக்கு இரங்கல் சொன்ன திரையுலக பிரபலங்கள்- வீடியோ
சென்னை: இருவர் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி நரகாசூரன் இயக்குனர் ட்வீட் செய்துள்ளார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம், இயக்குனரான கார்த்திக் நரேன், இப்போது நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கு இருவர் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
"புல்லின் நுனி அளவும் இப்போது பகை இல்லை. உன் பக்கத்தில் எனக்கும் ஓர் படுக்கையை விரித்து வை. என்றேனும் ஒரு நாள் உன் அருகினில் நான் வருவேன்"
என பிரகாஷ்ராஜ் பேசும் வசனத்தை குறிப்பிட்டு, சூழல் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால், உணர்வு ஒன்றுதான் என ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











