கார்த்திக் நரேனின் நரகாசூரன் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவர் இரண்டாவதாக இயக்கிய படம் நரகாசூரன்.
இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, இந்திரஜித், ஷிரேயா, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் மட்டும் தள்ளிப்போய்க் கொண்டே உள்ளது.
இதனால் அருண் விஜய்யை வைத்து இவர் இயக்கிய மாஃபியா சாப்டர் 1 படம் இவரது இரண்டாவது படமாகிவிட்டது. அடுத்தப்படியாக நடிகர் தனுஷையும் இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன்.
இந்நிலையில் நரகாசுரன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் சோனி லைவ்வில் இப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











