யு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்!

Recommended Video

யு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்!

சென்னை: துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள நரகாசூரன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த படம் துருவங்கள் பதினாறு. அந்த படத்தில் வரும் ரகுமான் கதாபாத்திரத்திற்கு முதலில் அரவிந்த் சாமியை நடிக்கவைக்க முயற்சி செய்ததாகக் கூறப்பட்டது.

Naragasuran certified U/A!

துருவங்கள் பதினாறு வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் அரவிந்த் சாமியை வைத்து நரகாசூரன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சாமியுடன் ஷ்ரேயா, சந்தீப் கிஷான், இந்திரஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ள இப்படத்திற்கு மாயா, சிகை போன்ற படங்களுக்கு இசையமைத்த ரான் ஈதன் ரோகன் இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தைப் போலவே இந்தப்படமும் த்ரில்லர் படமாக தயாராகியுள்ளது. ஒரு மணிநேரம் ஐம்பது நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குனர் நரேன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X