இருட்டு அறையில குத்துனாதான் தியேட்டருக்கு வராங்க... 'நரை' விழாவில் சங்கிலி முருகன் கிண்டல்!

'நரை' திரைப்பட விழாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை கிண்டல் செய்து பேசினார் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகன்.

சென்னை: 'நரை' திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகன், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை கடுமையாக தாக்கினார்.

கே 7 புரோடக்ஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரித்துள்ள படம் 'நரை'. அறிமுக இயக்குனர் விவி இந்த படத்தை இயக்கியுள்ளார். முதியோர்கள் ஒன்று சேர்ந்து வில்லன்களை பழிவாங்கும் திரில்லர் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.

சங்கிலி முருகன், சந்தானபாரதி, ஜூனியர் பாலையா, ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். புதுமுகம்கள் ரோஹித் - லீமா பாபு இந்த படத்தின் மூலம் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகிறார்கள். நடிகை ஈடன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

முதியவர்களை இயக்கிய இளைஞர்கள்

முதியவர்களை இயக்கிய இளைஞர்கள்

முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளம் இணைந்து முதியவர்களை இயக்கி இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் டிரெய்லரை வெளியிட்டார்.

முரட்டுக் குத்து குத்திய சங்கிலி முருகன்

முரட்டுக் குத்து குத்திய சங்கிலி முருகன்

நிகழ்ச்சியில் பேசிய பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சங்கிலி முருகன், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை கிண்டல் செய்தார். அவர் மேலும் பேசியதாவது, "அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போவதெல்லாம் திருவிழாவிற்குப் போவது மாதிரி. இப்போது எல்லாம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை. சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது, ரசிகனை இருட்டு அறையில் முரட்டு குத்து குத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நரையை வரவேற்போம்

நரையை வரவேற்போம்

இப்படி இருக்கும் காலத்தில் "நரை" போன்ற படம் வருவது மிகவும் வரவேற்க வேண்டிய விஷயம். இயக்குநர் விவி நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார். அவர் கதை சொல்லும் போதே, அவ்வளவு அருமையாக நடித்துக் காட்டுவார். ஒரு வேளை நாமும் இப்படித்தான் நடிக்க வேண்டுமோ? என்று நிறைய முறை குழம்பியிருக்கிறேன்.

நரை வெல்லும்

நரை வெல்லும்

இப்படத்தின் கேமராமேன் மிகவும் திறமை வாய்ந்தவர். நிறைய செலவு இல்லாமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்-திற்கும் இயக்குநர் விவி-க்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். "நரை" சந்தேகமேயின்றி வெற்றிபெறும்" என்றார்.

நரைக்கு பாராட்டு

நரைக்கு பாராட்டு

விழாவில் பேசிய தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, " தமிழ் சினிமாவை சிறுமைபடுத்தும் வகையிலான படங்கள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நரை படம் எடுக்கப்பட்டுப்பதாகக் கூறினார். விழாவில் கலந்துகொண்ட அனைவரும் இயக்குனர் வி.வி., ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், தயாரிப்பாளர் கேசவன் ஆகியோரை வெகுவாக பாராட்டினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X